Published : 04 Jul 2017 08:36 AM
Last Updated : 04 Jul 2017 08:36 AM
3000 பழைய ரயில் பெட்டிகளை முதல்கட்டமாக புதுப்பிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. உள்தோற்றத்தை மாற்றியமைத்தல், செல்போன் சார்ஜ் வசதி, பயோ கழிவறை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்திய ரயில்வேத் துறை 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு தினமும் 14 ஆயிரத்துக்கும் மேற் பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாடுமுழுவதும் தினமும் சராசரி யாக 2.36 கோடி பேர் ரயிலில் பயணம் செய்கின்றனர். மக்களின் அன்றாட போக்குவரத்து தேவை யில் ரயில் போக்குவரத்து மிக முக்கியமானதாக இருக்கிறது.
பயணிகளின் வசதிகளை மேம் படுத்தும் வகையில் விரைவு ரயில்களின் வேகத்தை அதிகரித் தல், முக்கிய மாநகரங்களை இணைக்கும் வகையில் அதி விரைவு சொகுசு ரயில்கள் இயக்கு தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை ரயில்வே துறை மேற் கொண்டு வருகிறது. இதேபோல், விரைவு ரயில்களில் ஏற்கனவே உள்ள பழைய பெட்டிகளைப் புதுப்பிக்கவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஐசிஎப் அதி காரிகள் கூறியதாவது: பயணிகள் விரைவாகவும், சொகுசாகவும் செல்லும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் எல்எச்பி பெட்டிகள் தயாரிப்பது அதிகரிக்கப் பட்டுள்ளது. ஒரு ரயில் பெட்டி 51.7 டன் எடை கொண்டது. அதிர்வுகள் இல்லாமல், பாதுகாப்பாகவும் வேகமாகவும் செல்லும் வசதியுள் ளது. வழக்கமாக செல்லும் விரைவு ரயில் பெட்டியில் 72 படுக்கைகள், ஏசி பெட்டியில் 64 படுக்கைகள் இருக்கும். இதுவே, எல்எச்பி பெட்டிகளில் 80 படுக்கைகள், ஏசி பெட்டியில் 72 படுக்கைகள் இருக்கும். அதன் படி, நாடு முழுவதும் முக்கிய விரைவு ரயில்களில் தற்போது பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு, புதிய எல்எச்பி பெட்டிகள் இணைக்கப் பட்டு வருகிறது.
இதற்கிடையே, பழைய பெட்டி களை புதுப்பிக்கும் பணியும் மற்றொரு புறம் நடந்து வருகி றது. இதற்கானப் பணிகளை மேற்கொள்ள ஐசிஎப்.க்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக பயணிகளைக் கவரும் வகையில் 3,000 பெட்டி களின் உள்தோற்றத்தை மாற்றிய மைக்க உள்ளோம். செல்போன் சார்ஜ் வசதி, இருக்கைகள், மின்விசிறி, ஜன்னல்கள் புதுப் பித்தல், பயோ கழிவறை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.
ஒவ்வொரு பெட்டிக்கும் ரூ.30 லட்சம் வரையில் செலவிடப் படுகிறது. புதுப்பிக்கும் பணிகளில் என்னென்ன செய்வது என்பது குறித்து ஐசிஎப் இறுதி செய்யும். அதன்பிறகு டெண்டர் மூலம் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, பெரம்பூர், திருச்சி, திருப்பதி, மைசூர் உட்பட மொத்தம் 6 தொழிற்சாலைகளில் பழைய ரயில் பெட்டிகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT