Published : 04 Jul 2017 09:34 AM
Last Updated : 04 Jul 2017 09:34 AM

ஆந்திராவில் நிகழ்ந்த கார் விபத்தில் திருச்சியை சேர்ந்த 5 பேர் பலி

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட் டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு நிகழ்ந்த விபத்தில் திருச்சியைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

திருச்சியைச் சேர்ந்த 10 பக்தர்கள் காரில் ஆந்திர மாநிலம் சைலம் சிவன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் அனந்தபூர் வழியாக வந்து கொண்டிருந்தனர். குசும்பல்லி கிராமம் அருகே, சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவர் மீது எதிர்பாராதவித மாக கார் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது.

இதில், காரில் பயணம் செய்த 2 பெண்கள், 2 ஆண்கள், ஒரு சிறுமி என 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.

திருச்சியில் வசித்தவர்

திருச்சி சிந்தாமணி பூசாரித் தெரு வைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். அதே பகுதியில் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டிக்குச் சென்று குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

அங்கிருந்து குடும்பத்துடன் கோயில் வழிபாட்டுக்குச் சென்றபோது நேற்று முன்தினம் இரவு கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கினர். இதில், பாண்டியராஜனின் மகன் கார்த்திக், மனைவி அமுதா உட்பட 5 பேர் இறந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊர் வடக்கம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது என திருச்சி மாநகர போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x