Published : 03 Jul 2017 10:00 AM
Last Updated : 03 Jul 2017 10:00 AM
பெரும்பாலான இடங்களில் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிவதால், குப்பை நகரமாகிவிட் டது. குப்பையை அகற்றிய பிறகு பிளீச்சிங் பவுடர் தெளிக்காததால் குடலைப் புரட்டும் அளவுக்கு துர் நாற்றம். இது வேறெங்கும் அல்ல. 329 ஆண்டுகள் பழமையான நம் சென்னை மாநகரில்தான் இந்த அவலம்.
சென்னை மாநகர் 426 ச.கி.மீட்டர் பரப்பளவில், 15 மண்டலங்கள், 200 வார்டுகளுடன் 29-1-2016 முதல் பெருநகர சென்னை மாநகராட்சி யாக செயல்படுகிறது. சென்னை மக்கள் தொகை சுமார் 80 லட்சம். தினமும் 20 லட்சம் பேர் இம் மாநகருக்கு வந்து செல்கின்றனர். சொத்து வரி, தொழில் வரி மூலம் கோடிக்கணக்கில் வரி வசூலிக் கிறார்கள். ஆனால், அந்தளவுக்கு மக்க ளுக்கு அடிப்படை வசதிகளும், சுகாதாரமான சுற்றுச்சூழலும் இருக் கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.
சென்னையில் தினமும் 5,400 மெட்ரிக் டன் குப்பைகள் உற்பத்தி யாகின்றன. முதல்கட்டமாக 5,422 மூன்று சக்கர மிதிவண்டிகள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இரண்டாம் கட்டமாக இலகுரக வாகனங்கள், கனரக வாகனங்கள், டிப்பர் லாரிகள் மூலம் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு, கொடுங்கை யூர் மற்றும் பெருங்குடி குப்பை வளாகங்களுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றன. சென்னை மாநகரில் 19,362 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
முன்பெல்லாம் துப்புரவு பணியாளர்கள் காலையிலேயே பணியில் ஈடுபடுவார்கள் என்றும் இப்போது அதுபோல காலையில் பணியைத் தொடங்குவதில்லை என்றும் மக்கள் குறைகூறுகின்றனர். குப்பை சேகரிக்கும் வாகனங்கள் குறிப்பாக காம்பேக்டர் லாரிகளை காலை, மாலை நெரிசல் நேரத்தில் இயக்கக்கூடாது என்று உத்தர விடப்பட்டுள்ளது.
இந்த லாரிகள் பெரியளவில் இருக்கும் என்பதால் அது செல்லும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப் பினரும் சிரமப்படுவார்கள் என்ப தால்தான் இந்த உத்தரவு பிறப் பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
சென்னையில் தேனாம்பேட்டை (மண்டலம் 9), கோடம்பாக்கம் (10), அடையாறு (13), பெருங்குடி (14), சோழிங்கநல்லூர் (மண்டலம் 15) ஆகிய 5 மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இந்த மண்டலங் களிலும் துப்புரவு பணியாளர்கள் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு வருவதில்லை என்றும், காம்பேக்டர் லாரிகள் காலையில் நெரிசல் நேரத்தில் வருவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
முன்பெல்லாம் சாலைகளில் கண்ணில் தெரியும்படி குப்பைத் தொட்டிகள் இருக்கக்கூடாது என் பதற்காக குப்பைத் தொட்டிகளை நீலநிற ஷெட்டுக்குள் மறைவாக வைத்திருந்தனர். அந்த ஷெட்டு களை மூடி முறையாகப் பராமரிக் காததால் அங்கே கறிக்கடைக் காரர்கள் ஆடு கட்டிவைக்கவும், காயிலாங் கடைக்காரர்கள் பழைய இரும்பு சாமான்களை போட்டுவைக் கவும், மணல் கொட்டி வைக்கவும் வசதியாகப் போய்விட்டது. சமூக விரோத செயல்களும் சர்வசாதார ணமாக அரங்கேறின.
அதனால் நாளடைவில் அந்த ஷெட்டுகளையே அப்புறப்படுத்தி விட்டனர். அவற்றை சரிவர பராமரிப்பதை விட்டுவிட்டு மீண்டும் குப்பைத் தொட்டிகளைத் திறந்த வெளியிலேயே வைத்துள்ளனர். அவற்றில் குப்பைகள் நிரம்பி வழிவதாலும், குடலைப் புரட்டும் துர்நாற்றத்தாலும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பல குப்பைத் தொட்டிகள் பள்ளிக் கூடங்கள், கோவில்கள் அருகிலே வைத்திருப்பது உச்ச கட்ட கொடுமை.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி கள், அரசியல்வாதிகள், தொழில திபர்கள், நீதிபதிகள் என விஜபி-க்கள் வசிக்கும் பகுதிகளைத் தவிர சென்னை மாநகரின் இதர பகுதிகள் முழுவதும் குப்பைக் கூளங்கள், துர்நாற்றத்துடன் இருப் பதுதான் எழில்மிகு சென்னையோ என்கின்றனர் விவரம் தெரிந்த வர்கள். திருப்பதி போல மூன்று ஷிப்டுகளாக குப்பைகளை அகற்றி னால்தான் சென்னை எழில்மிகு நகரமாகும்.
இதுகுறித்து சமூக ஆர்வலரும், ‘கிரீன் என்விரோன்ஸ்’ அமைப் பின் தலைவருமான வி.சந்தியா கூறுகையில், “சுமார் 80 லட்சம் பேர் வசிக்கும் சென்னை மாநகரில் குப்பையை சேகரித்து சுத்தமாக வைத்திருக்கும் பணியை முழுமை யாக தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் உள்ள பெருநகரங் களில் குப்பையை சேகரித்து சுத்தமாக வைத்திருக்கப் பயன் படுத்தும் நவீன முறையை தமிழ கத்தில் பயன்படுத்த வேண்டும். குப்பையைக் கொட்டுவதற்கும், அதை சேகரிப்பதற்கும் நேரம் ஒதுக்குவது மட்டுமல்லாமல், அது சரிவர செய்யப்படுகிறதா என் பதை டிஜிட்டல் முறையில் கண் காணிப்பது அவசியம். விதியை மீறி செயல்படும் தனியார் ஒப்பந்த தாரரை நீக்கிவிட்டு, மற்றொரு ஒப்பந்ததாரரை நியமிக்கும் வகை யில் உரிய சட்டதிருத்தங்கள் செய்ய வேண்டும். இந்த விஷயத் தில் அதிகாரிகள் கையூட்டு பெறாமல் இப்பணியைச் செய்தால் சென்னை நிச்சயம் தூய்மையான மாநகரமாக மாறும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT