Last Updated : 27 Jul, 2017 10:34 AM

 

Published : 27 Jul 2017 10:34 AM
Last Updated : 27 Jul 2017 10:34 AM

தமிழக சிறைகளுக்கு 35 நவீன ஆம்புலன்ஸ்

தமிழகத்திலுள்ள 9 மத்திய சிறை கள் உட்பட 35 சிறைகளுக்கு உயிர் காக்கும் மருத்துவ உபகரணங் களுடன் கூடிய நவீன ஆம் புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் 9 மத்திய சிறை, 5 மகளிர் சிறப்பு சிறை, 3 திறந்த வெளி சிறை மற்றும் மாவட்ட, கிளை சிறைகள் உள்ளன. சிறை வாசிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால், சிகிச்சை அளிக்க சிறை மருத்துவமனைகள் செயல் பட்டு வருகின்றன.

மேலும், அவசரம் மற்றும் தேவை கருதி சிறைவாசிகளை பிற மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும் உள்ளன.

இவற்றில், 9 மத்திய சிறைகள் உட்பட 35 சிறைகளுக்கு உயிர் காக்கும் மருத்துவ உபகரணங் களுடன் கூடிய நவீன ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சிறைகளில் கைதிகளுக்கு விபத்து, உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த படியே, மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் வகையில் 35 ஆம்புலன்ஸ் வாகனங்கள், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் வாயிலாக வாங்கப்பட உள்ளன.

இவற்றை புழல்-1, புழல்-2, வேலூர், கடலூர், திருச்சி, கோவை, சேலம், மதுரை, பாளையங்கோட்டை ஆகிய 9 மத்திய சிறைகள், புழல், திருச்சி, மதுரை, கோவை, வேலூர் ஆகிய 5 மகளிர் சிறைகள், புதுக்கோட்டையிலுள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உட்பட 35 சிறைகளுக்கு ஓரிரு மாதங்களில் வழங்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x