Published : 26 Jul 2017 09:27 AM
Last Updated : 26 Jul 2017 09:27 AM
ஆடிப்பட்ட மழை இந்த ஆண்டு தற்போது வரை பெய்யத் தொடங்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் விவசாயம் பொது வாக வடகிழக்கு பருவமழையை யும் தென் மேற்கு பருவமழையை யும் அடிப்படையாக கொண்டது. கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தில் இவ்விரண்டு பருவமழை காலங் களும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பொய்த்துப் போனது. இந்த ஆண்டு நீண்ட கோடை காலத்துக்குப் பிறகு இந்த ஆடிப்பட்டத்தில் நல்ல மழை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
பொதுவாக ஆண்டுதோறும் ஜூலை 14-ம் தேதியில் இருந்து ஆடிப்பட்ட மழை ஆரம்பித்து விடும். ஆடிப் பட்டம் மழை ஆடிப்பட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஒரு மழையும், ஆடிப்பட்டத்தில் விதைத்தபிறகு உயிர் காக்க ஒரு மழையும், 25-ம் நாள் வளர்ச் சிக்கெனவும், 45-ம் நாள் பூப்பதற் கெனவும் 65-ம் நாள் பறிப்பதற்கு முன்பு ஒரு மழையும் பெய்யும். ஆடிமாதத்தில் பெய்யும் இந்த மழை தமிழகத்தில் மானாவாரி சாகுபடி பரப்பையும் அதிகப் படுத்தும். கடந்த ஆண்டு இந்தநேரத்தில் ஆடிப்பட்ட மழை பெய்தது. ஆனால், இந்த ஆண்டு தற்போது வரை இந்த ஆடிப்பட்ட மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியாளர் பிரிட்டோ ராஜ் கூறியதாவது; பொதுவாக கேரள மாநிலம், தென் மேற்கு பருவமழையால் அதிகளவு மழை பெறும். கடந்த 5 ஆண்டுகளாக முறையற்ற பருவமழையால் தென் மேற்கு பருவமழை சுமார் 40 முதல் 50 சதவீதம் அம்மாநிலத்தில் குறைந்தது. இதேகாலத்தில் தென் மேற்கு பருவமழையால் குறைந்தளவு மழை பெய்ய வேண்டிய கோவா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில், இக்காலத்தில் இப்பகுதிகள் அதிகளவு மழையை பெற்று வரு கிறது. ஒரு சில இடங்களில் வெள் ளப்பெருக்கு ஏற்படும் அளவுக்கு மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய 14 மாவட்டங் களில் அதிகளவு மழை நாட் களை இந்த ஆடிப்பட்டம் பெறுவது வழக்கம். பொதுவாக 7 நாட்களாவது மழை பெய்ய வேண்டும். ஆனால், இந்த ஆண்டு பெய்யாத தால் ஆடிப்பட்டம் விவசாயமே பொய்த்துப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. பெய்த மழையும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சீராக பெய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆழ்துளை கிணறுகளை தவிருங்கள்
தற்போது ஆழ்துளை கிணறுகளில் அதிக குதிரை சக்தியுள்ள மோட்டார்களை பயன்படுத்தி ஊற்று எனப்படும் நீர் தாங்கிகளில் உள்ள நீர், வேகமாக அதிகளவு உறிஞ்சப்படுதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைகிறது. தற்போது ஆழ்துளை கிணறு போடுவதை தவிர்க்க வேண்டும். பெய்யும் மழை நீரை அந்தந்த நிலங்களில் சேமித்தால் மட்டுமே எதிர்கால விவசாயம் நிலைக்கும். ஒவ்வொரு வீடுகளிலும் கூரையில் விழும் மழைநீரை நிலத்தடியில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் சேமிப்பதுடன் மீதமுள்ள தண்ணீரை மழை நீர் சேகரிப்பு தொட்டிகளில் சேமித்து ஆழ்துளை கிணறுகளை செறிவூட்ட வேண்டும் என்கிறார் பிரிட்டோ ராஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT