Published : 08 Jul 2017 09:08 AM
Last Updated : 08 Jul 2017 09:08 AM
விதிகளை மீறும் வகையில் அமைக்கப்படும் வேகத்தடைகள் தான் சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என்று கூறப் படுகிறது. அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் நடந்த 71,431 சாலை விபத்துகளில் 17,218 பேர் உயிரிழந்தனர். சாலை விதிமீறல்கள் மற்றும் கவனக்குறை வாக வாகனங்களை ஓட்டுவதே சாலை விபத்துகள், உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரண மாக உள்ளன. இது மட்டு மின்றி, விதிகளை மீறி ஆங் காங்கே அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளும் முக்கியக் காரணமாக உள்ளது.
சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச் சேரி, சிதம்பரம் செல்லும் சாலை களில் எதிர்பாராத இடங்களில் வேகத்தடைகள் காணப்படுகின் றன. இதனால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகள் ஏற்படுகின்றன. சென்னையிலும் விதிகளை மீறி ஒழுங்கற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளால் சாலை விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன.
கடந்த மார்ச் 18-ம் தேதி பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் பட்டினப்பாக்கம் அருகே சொகுசு காரை வேகமாக ஓட்டிச் சென்ற போது, அங்கு இருந்த வேகத் தடையில் கார் பலத்த வேகத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப் பட்டு, கார் தீப்பிடித்ததில் அவரும், மனைவியும் உடல் கருகி இறந்தனர்.
பெரம்பலூரில் இருந்து சென் னைக்கு அரசு பேருந்தை ஓட்டுநர் ஜெயராமன் நேற்று ஓட்டி வந்தார். கோயம்பேடு வந்தடைந்ததும், பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் வழியாக சென்றபோது, அங்கிருந்த வேகத்தடை மீது பேருந்து வேகமாக ஏறி இறங்கி யது. இதில் பேருந்து திடீரென குலுங்கியது. அப்போது பேருந் தில் இருந்த சுமதி என்ற பயணி நிலை குலைந்து மோதிக்கொண் டதில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுபோன்ற சம்பவங்கள் பரவலாக நடக்கின்றன. ஆனால், சாலைகளில் இருக்கும் வேகத் தடைகள் முறைப்படுத்தப்பட்டு, சீரமைக்கப்படு கிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நாடு முழுவதும் சாலை விதி முறையை மேம்படுத்த இந்தியன் ரோடு காங்கிரஸ் (ஐஆர்சி) என்ற அமைப்பு மூலம் சாலை கட்டமைப்பு, சாலை பராமரிப்பு மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மத்திய அரசு மேற் கொண்டு வருகிறது. ஆனால், ஐஆர்சி வழங்கும் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவது இல்லை. இதனால், சாலை விபத்துகள் நடக்கின்றன.
சென்னையில் 400-க்கும் மேற் பட்ட இடங்களில் வேகத்தடைகள் இருக்கின்றன. சில இடங்களில் இந்த வேகத்தடைகள், ஐஆர்சி விதிமுறைப்படி அமைக்கப்பட வில்லை. பள்ளி, கல்லூரி, மருத் துவமனை, சுங்கச்சாவடிகள், மேம்பாலங்கள், முக்கிய ரயில் சந்திப்புகள், சாலை வளைவு பகுதிகளுக்கு அருகில்தான் வேகத் தடைகள் அமைக்க வேண்டும். நகரங்களில் உள்ள சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மட்டுமே வேகத்தடை அமைக்க வேண்டும். நெடுஞ்சாலைகள், புறநகர் சாலைப் பகுதிகளில் அமைக்க கூடாது என்று பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
ஆனால், சில இடங்களில் உள் சாலைகளில் விதிகளை மீறி வேகத்தடைகள் அமைக்கப்பட் டுள்ளன. அந்த இடங்களில் எச்ச ரிக்கைப் பலகையும் இருப்ப தில்லை. இதனால், வாகன ஓட்டி கள் விபத்தில் சிக்குகின்றனர். வேகத்தடைகளை போக்குவரத்து போலீஸ் அல்லது மாநகராட்சி கள்தான் தொடர்ந்து கண் காணித்து, பராமரிக்க வேண்டும். ஆனால், அவர்கள் இப்பணியை சரியாக மேற்கொள்வது இல்லை என்ற புகாரும் உள்ளது.
ஐஐடி பேராசிரியர் கருத்து
இதுபற்றி சென்னை ஐஐடி பேராசிரியர் கீத கிருஷ்ணன் கூறிய போது, ‘‘விதிமுறைகள் மீறி அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை களும் சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணம். வேகத்தடை களை சீரமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக ஆங்காங்கே நடந்து வருகின்றன. இன்னும் சில இடங்களில் விதிமுறைகளை மீறி வேகத்தடைகள் இருப்பதைக் காண முடிகிறது. எனவே, ஐஆர்சி விதிப்படி வேகத்தடைகள் அமைக்க வேண்டும். விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்’’ என்றார்.
என்னென்ன விதிமுறைகள்?
வேகத்தடைகள் 3.7 மீட்டர் அகலத்தில், உயரம் 10 செ.மீ.க்கு மிகாமல் அமைக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. வேகத்தடை பளிச்சென்று தெரியும்படி வர்ணம் பூசப்பட வேண்டும். இரவில் ஒளிரும்படி விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். வேகத்தடை இருப்பதை உணர்த்தும் வகையில் 40 மீட்டர் முன்பு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று பல விதிமுறைகளை வரையறுத்துள்ளது இந்தியன் ரோடு காங்கிரஸ் அமைப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT