Published : 03 Jul 2017 11:42 AM
Last Updated : 03 Jul 2017 11:42 AM

தனியார் எழுத்துருக்களை பயன்படுத்தும் அரசுத் துறைகள்: அரசு உத்தரவையும் மீறி இலவச யுனிகோடு எழுத்துருக்கள் புறக்கணிப்பு

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்து கணினிகள், ஸ்மார்ட் கைபேசிகள், கையடக்க கணினிகள் என அனைத்திலும் தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த எழுத்துருக்களைக் கொண்டு, தமிழ் தட்டச்சு செய்யத் தெரி யாதவர்கள் கூட, ஃபொனடிக் விசைப் பலகையைக் கொண்டு தமிழ் தட்டச்சு செய்து, குறுஞ் செய்தியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.

தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள்தான் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன. இந்த யுனிகோடு எழுத்துருக்கள், இணையத் தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ளது.

இதை கருத்தில் கொண்டு, அரசால் நியமிக்கப்பட்ட, அப்போது தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநராக இருந்த பி.ஆர்.நக்கீரன் தலைமையில் 5 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ஆய்வு செய்து, அதை அரசுத் துறைகளும், பொதுமக்களும் பயன்படுத்தலாம் என, அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. அதை அரசு ஏற்றுக்கொண்டு கடந்த மார்ச் 2013-ல் ஆணை பிறப்பித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து நவம் பர் 2013-ல் வெளியிடப்பட்ட அரசாணையில் “அரசுத் துறைகள், தலைமைச் செயலகம் ஆகிய வற்றில், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட தனியார் எழுத்துருக் களைப் பயன்படுத்தவதாக அரசு கவனத்துக்கு வந்துள்ளது. அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கியுள்ள தமிழ் யுனிகோடு விசைப் பலகை செயலி மற்றும் தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள், >http://tamilvu.org/tkbd/index.htm என்ற இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. அதனால் விலை கொடுத்து வாங்கப்படும் தனியார் எழுத்துருக்களுக்கு பதிலாக, இலவசமாக கிடைக்கும் யுனிகோடு எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்து, நிறுவி பயன்படுத்தலாம்” என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை பெரும்பாலான அரசு அலுவலகங்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. இது தொடர்பாக பல அரசுத் துறை களில் கேட்டபோது, ‘‘பல்வேறு விவரங்களை தனியார் எழுத் துருவில் வழங்குமாறு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை கேட்கிறது. தலைமைச் செயல கத்திலிருந்து எந்த தகவலைக் கேட்டாலும், தனியார் எழுத்துருவில் தான் கேட்கிறார்கள். அதனால் நாங்கள் தனியார் எழுத்துருவையே பயன்படுத்த வேண்டியுள்ளது’’ என்றனர்.

நிலைமை இவ்வாறு இருப்ப தால், தற்போது பெரும்பான்மை யான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் யுனிகோடு எழுத்துரு மூலம், அரசின் அறிவிப்புகள், உத்தரவுகளை இணையதளத்தில் தேட முடிவதில்லை.

இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் கேட்ட போது, ‘‘அனைத்து அரசுத் துறைகளும் யுனிகோடு எழுத்துருவை பயன்படுத்துமாறு மீண்டும் அறிவுறுத்தப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x