Published : 19 Jul 2017 09:47 AM
Last Updated : 19 Jul 2017 09:47 AM
கைத்தறி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சார்பில், கைத்தறி நெசவாளர்களை வெளி நாடுகளுக்கு அழைத்துச் சென்று நேரடி செயல் விளக்கம் மூலம் ஆர்டர்கள் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் 2-வது மிகப்பெரிய தொழில் துறையாக ஜவுளித் துறை திகழ்கிறது. நாடு முழுவதும் 23.77 லட்சம் தறிகள் உள்ளன. இவற்றின் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தேவையான உதவிகளைக் கைத் தறி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் செய்து வருகிறது.
சென்னையை தலைமையிட மாகக் கொண்டு 1965-ம் ஆண்டு 96 உறுப்பினர்களுடன் தொடங்கப் பட்ட இந்த ஆணையத்தில் தற் போது 1,400 கைத்தறி நெசவா ளர்கள் உறுப்பினர்களாக உள்ள னர். இந்த ஆணையம் உள்நாட் டில் கைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி பொருட் களுக்கு வெளிநாடுகளில் விற் பனையை அதிகரிக்கும் வகை யில் நெசவாளர்களை வெளிநாடு களுக்கு அழைத்துச் சென்று நேரடி செயல் விளக்கம் அளித்து ஆர்டர்கள் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து கைத்தறி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத் தின் செயல் இயக்குநர் ஆர்.ஆனந்த் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழகத்தில் கரூர், கேரளாவில் கண்ணூர், உத்தரபிரதேச மாநிலத் தில் உள்ள வாரணாசி மற்றும் ஹரி யானா மாநிலத்தில் உள்ள பானிபட் ஆகிய நகரங்கள் கைத்தறி ஜவுளி ஏற்றுமதியின் முக்கிய மையங் களாக திகழ்கின்றன. கைத்தறி மூலம் தயாரிக்கப்படும் துணிகள், படுக்கை விரிப்புகள், மேஜை விரிப்புகள், தரை விரிப்புகள், திரைச் சீலைகள், கழிவறை மற்றும் சமையலறை பயன்பாட்டுத் துணிகள், மெத்தைகள், கம்பளங் கள் உள்ளிட்டவை வெளிநாடு களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்வீடன், தென் ஆப் ரிக்கா, கிரீஸ், தாய்லாந்து, சிலி, இலங்கை, பெல்ஜியம், கனடா, டென்மார்க், நார்வே ஆகிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கைத்தறி ஜவுளிகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், இந்திய கைத் தறி நெசவாளர்களின் தயாரிப்பு களை வெளிநாடுகளில் பிரபலப் படுத்தும் வகையில் அங்கு நடை பெறும் கண்காட்சி மற்றும் கருத் தரங்குகளுக்கு இந்திய கைத்தறி நெசவாளர்களை அழைத்துச் சென்று பங்கேற்க வைக்கிறோம். குறிப்பாக, கண்காட்சியில் அவர் கள் கைத்தறி மூலம் ஜவுளி களை நேரடியாக உற்பத்தி செய் யும் செயல் விளக்கம் அளிக்கப் படுகிறது. இதன் மூலம், அந்நாட்டி னருக்கு நம் பொருட்களின் தயாரிப்பு தரத்தை நேரடியாக காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அத்துடன் ஆர்டர்களும் பெறப் படுகின்றன.
தேசிய ஜவுளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2016 -17-ல் ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து 12 கைத்தறி நெசவாளர்கள் அழைத் துச் செல்லப்பட்டனர். இவர்கள் அங்கு நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்றனர். அதேபோல், இத்தாலி தலைநகர் ரோம், ஜப்பானில் உள்ள ஒசாகா, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் ஆகிய நகரங்களில் இந்திய கைத்தறி நெசவாளர்கள் கைத்தறி மூலம் ஜவுளிகளை நேரடியாக உற்பத்தி செய்யும் செயல் விளக்கம் அளித்தனர்.
14 நெசவாளர்கள் பங்கேற்பு
2017-18-ல் ஆண்டில் தமிழகத் தில் உள்ள சென்னிமலை, கேரளா வில் உள்ள கண்ணூர், வடகிழக்கு மாநிலம், ஆந்திராவில் உள்ள போச்சம்பள்ளி மற்றும் அசாம் மாநிலத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் தொகுப்பைச் சேர்ந்த மொத்தம் 14 பேர் ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் மூலம் இந்திய கைத்தறி ஜவுளிகளின் விற்பனை வெளிநாடுகளில் மேலும் அதிகரிக்கும். இதன் மூலம் நெசவாளர்கள் பயன் அடைவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT