Published : 03 Jul 2017 09:29 AM
Last Updated : 03 Jul 2017 09:29 AM
மகாராஷ்டிர மாநிலத்தில் உற் பத்தி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கு அங்கு உரிய விலை கிடைக்காததால், தமிழகத் துக்கு அனுப்பப்படுகின்றன. கொங்கு மண்டல சந்தைகளில் இந்த வெங்காயத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மிக அதிகளவில் பெரிய வெங் காயம் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் வியாபாரிகள் கூறிய தாவது:
மகாராஷ்டிர விவசாயிகளிடம் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, சரக்கு லாரிகளில், 13 டன் தொடங்கி அதிகபட்சம் 23 டன் வரை ஏற்றி, தமிழக சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகிறது.
ஒவ்வொரு சந்தையிலும் வெங்காய மூட்டைகள் இறக்கி வைத்ததுபோக, குறைந்தபட்சம் ஒவ்வொரு மாநகரிலும் 10 சரக்கு லாரிகளில் வெங்காய மூட்டைகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் அதிக அளவும், அதேபோல் சென்னை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பான்மை ஊர்களிலும் மகாராஷ்டிர பெரிய வெங்காயம் அதிகளவில் வந்துள்ளது.
இவை தற்போது சாலையோரங் களில் 8 கிலோ தொடங்கி 9 கிலோ வரை ரூ.100-க்கு விற்கப்படுகிறது. இவற்றைத் தேக்கி வைத்து விற்பனை செய்யும் அளவுக்கு கிடங்குகள் இல்லை என்றனர்.
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் மா.ஈஸ்வரன் கூறிய தாவது:
விவசாயி உற்பத்தி செய்யும் பொருளுக்கு நாடு முழுவதும் உரிய விலை கிடைப்பதில்லை. மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.1-க்கு பெரிய வெங்காயம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் ஒரு விவசாயி ஒரு கிலோ உற்பத்தி செய்ய ரூ.5 செலவாகும். கிலோவுக்கு சுமார் ரூ.4 வரை நஷ்டம் அடைகின்றனர்.
வெளிநாடுகளில் என்ன பயிர் உற்பத்தி செய்கிறோம் என்பதை, அந்த நாட்டின் வேளாண்துறை கணக்கீட்டு விவசாயிகளின் ஒரே பயிர் சாகுபடி பிரச்சினைகளைக் களையும். குறிப்பிட்ட ஒரு பயிரை மட்டும் அதிகளவில் உற்பத்தி செய்ய அங்குள்ள அரசு அனுமதிப்பதில்லை. மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்யச் சொல்வார்கள்.
அரசிடம் முறையான திட்டமிடல் இல்லாததால், இந்தியாவில் விவசாயக் குடும்பங்கள் அழிவை சந்திக்கும் நிலைதான் ஏற்படும். ஆனால் அதேசமயம் வெங்காய வியாபாரிகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் என்றார்.
பொங்கலூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:
தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக சிறிய வெங்காயம் மட்டுமே பயிரிடப்படுகிறது. பெரிய வெங்காயம் பெரிய அளவில் உற்பத்தி இல்லை.
குறிப்பாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம், பொங்கலூர், பல்லடம், திருச்சி மாவட்டம் துறையூர், பெரம்பலூர், ஈரோடு சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் சிறிய வெங்காயம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சிறிய வெங்காயம் கிலோ ரூ.60 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
மத்திய அரசு பெரிய வெங்கா யத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்திருந்தால், விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்திருக்கும். மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு பெரிய வெங் காயம் வரவில்லையென்றால், இன்றைக்கு கர்நாடக மாநில வெங்காயத்தை ரூ.50 கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT