Published : 26 Nov 2014 03:11 PM
Last Updated : 26 Nov 2014 03:11 PM

சோனியா காந்தியை சந்திக்கிறார் நடிகை குஷ்பு

நடிகை குஷ்பு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று மாலை டெல்லியில் சந்திக்கிறார்.

குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் அவர் இன்று மாலை சந்திக்கவுள்ளார்.

சோனியாவுடனான சந்திப்புக்குப் பின்னர் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியையும் அவர் சந்திப்பார் எனத் தெரிகிறது.

முன்னதாக, குஷ்பு பாஜகவில் இணையிருப்பதாக தகவல்கள் வெளியானது. இத்தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்தார். இந்நிலையில் இன்று அவர் காங்கிரஸ் தலைவரை சந்திக்கிறார்.

திமுகவில் இருந்து நடிகை குஷ்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெளியேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x