Published : 31 Jul 2017 10:04 AM
Last Updated : 31 Jul 2017 10:04 AM

விதி மீறி ரயில் பாதையை கடப்பதால் 5 மாதங்களில் மட்டும் 550 பேர் பலி: 20 சதவீதம் செல்போனால் மரணம்

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட காவல் பகுதிகளில் மட்டும் கடந்த 5 மாதங்களில் ரயில் பாதையைக் கடக்க முயன்றவர்களில் 550 பேர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். இவர்களில் 20 சதவீதம் பேர் செல்போனைப் பயன்படுத்திக் கொண்டே ரயில் பாதையைக் கடந்தததால் உயிரிழந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் ரயில் விபத்துகளால் ஆண்டுதோறும் சராசரியாக 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. ரயில்கள் விபத்துகளில் சிக்குவதால் ஏற்படும் உயிரிழப்புகளை விட, விதிமுறைகளை மீறி ரயில் பாதைகளைக் கடப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம் என தெரியவந்துள்ளது.

குறிப்பாக, பாதுகாப்பு விதிகளை மீறி வாகனங்கள் மூலம் ரயில் கேட் மற்றும் பாதைகளை கடந்து செல்வது, செல்போன் பேசிக் கொண்டே பாதைகளில் நடந்து செல்வது, மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலில் தவறி விழுதல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் சென்னை காவல் கோட்ட கட்டுப்பாட்டின் கீழ் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், தருமபுரி, ஓசூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் உள்பட 23 ரயில்வே நிலையங்கள் உள்ளன. இந்த சென்னை கோட்டப் பகுதிகளில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரையிலான 5 மாதங்களில் மட்டும் ரயில் பாதையைக் கடக்க முயன்றவர்களில் 550 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக தாம்பரத்தில் 62 பேரும், ஜோலார்பேட்டை மற்றும் கொருக்குப்பேட்டையில் தலா 55 பேரும், எழும்பூரில் 54 பேரும், பெரம்பூரில் 41 பேரும், சென்ட்ரல், திருப்பூரில் தலா 40 பேரும் இறந்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை கோட்டம் ரயில் போலீஸ் உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘சென்னை கோட்டம் ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையும் இணைந்து ரயில் பாதைகளில் விதிமுறைகள் மீறுவோர் மீது வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நட வடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், பல்வேறு ரயில் நிலையங் களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். ஆனாலும், பயணிகள் விதிகளை மீறி ரயில்பாதையை கடந்து செல்கின்றனர்’என்றனர்.

இது தொடர்பாக சென்ட்ரல் ரயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் கூறியதாவது:

ஒட்டுமொத்தமாக ரயில் விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் 20 சதவீதம் பேர் செல்போனைப் பயன் படுத்து பவர்களாக உள்ளனர். செல்போன் மோதி இறந்த இடத்துக்கு நாங் கள் சென்று பார்த்தால், செல் போனை மர்ம நபர்கள் திருடிச் சென்று விடுகின்றனர். இதனால் இறந்தவரின் முகவரி, அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே,ரயிலில் ஏறும்போதும், இறங்கும்போதும் பயணிகள் செல்போன் பயன்படுத் தாமல் இருப்பது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x