Published : 16 Jul 2017 10:50 AM
Last Updated : 16 Jul 2017 10:50 AM

பிரச்சினைக்குரிய ஓபிஎஸ் கிணற்றில் இருந்து லெட்சுமிபுரம் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லெட்சுமிபுரம் மக்களின் குடிநீர் தேவையை வரும் 90 நாட்களுக்கு பூர்த்திசெய்யும் பொருட்டு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான கிணற்றின் பயன்பாட்டை கிராமக் குழுவிடம் ஓபிஎஸ் தரப்பினர் ஒப்படைத்தனர்.

லெட்சுமிபுரம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள ஊராட்சி கிணற்றின் அருகே ஓபிஎஸ் தரப் பினர் ராட்சத கிணறு தோண்டிய தால் தங்கள் கிராமத்தின் நீரா தாரம் பாதிக்கப்பட்டதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர். இதனால் கிணற்றை தங்களிடம் ஒப்படைக் கவேண்டும் என, வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். பலகட்டமாக நடை பெற்ற பேச்சுவார்த்தைகளில் தீர்வு ஏற்படவில்லை. இந்நிலையில், தோட்டத்துக் கிணறு ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜய லட்சுமிக்கு சொந்தமானது என்ப தால், ஓ.பன்னீர்செல்வம் நேரில் வந்து நேற்று முன்தினம் இரவு கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், பேச்சுவார்த் தையில் உடன்பட்டது போல அடுத்துவரும் 90 நாட்களுக்கு தோட்டத்து கிணறு மூலம் மக்களின் பயன்பாட்டுக்காக தண்ணீர் எடுத் துக்கொள்ள அனுமதித்து, ஓ.பன் னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா கிராமக்குழுவிடம் கிணற்றின் பொறுப்பை ஒப்படைத்தார்.

ஒரு நாளைக்கு 6 லட்சம் லிட்டர் தண்ணீர்

லெட்சுமிபுரம் அருகே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு சொந்தமான பிரச் சினைக்குரிய கிணற்றில் இருந்து ஒரு நாளைக்கு 6 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. நேற்று கிணற்றின் பொறுப்பை கிராமக்குழுவிடம் ஒப்படைத்தவுடன் அருகில் இருந்த ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றுக்கு, பிரச்சினைக்குரிய கிணற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து வழக்கம்போல லெட்சுமிபுரம் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x