Published : 25 Jul 2017 09:11 AM
Last Updated : 25 Jul 2017 09:11 AM
நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர் வோர் விவகாரங்கள் துறை இணையதளத்தை மேம்படுத்தாத தால், குடும்ப அட்டைதாரர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டையை ஸ்மார்ட் குடும்ப அட்டையாக மாற்றி விநியோகிக் கும் பணி கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப்பணியை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகம் மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. அதில், இதுவரை 1 கோடியே 20 லட்சம் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் விநி யோகிக்கப்பட்டுள்ளன. 8 லட்சம் அட்டைகளை அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 52 லட்சம் ஸ்மார்ட் குடும்ப அட்டைகளுக்கான புகைப்படங்கள் மற்றும் ஆதார் விவரங்கள் பெறப் பட்டு வருகின்றன.
ஸ்மார்ட் குடும்ப அட்டையில் அச்சிடுவதற்கான விவரங்களை பொதுமக்களிடம் இருந்து நேரடி யாக பெற்றால் தாமதமாகும் என்பதால், ஆதார் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிலிருந்து விவரங்கள் பெறப்பட்டு, மொழி பெயர்த்து, ஸ்மார்ட் அட்டைகள் அச்சிடப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான ஸ்மார்ட் அட்டைகள் எழுத்துப் பிழையுடன் உள்ளன. மேலும் பலர் தங்களுடைய புகைப்படங்களை வழங்காததால், அவர்களுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை. இந்நிலை யில் ஸ்மார்ட் அட்டையில் திருத் தங்கள் மேற்கொள்ளவும், புகைப் படங்களை இணைக்கவும் உணவுப் பொருள் வழங்கல் இணையதள மான www.tnpds.gov.in, TNEPDS என்ற கைபேசி செயலி மற்றும் அந்தந்த நியாய விலைக் கடைகளில் திருத்தம் மேற்கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது.
கணவன், மனைவி இருவரும் பணிக்கு செல்லும் குடும்பத்தினர், வெளியூரில் பணியில் இருக்கும் கணவரை கொண்ட குடும்பத்தினர் நியாயவிலைக் கடைகளை நாடிச் செல்லாமல் இணையதளம் மூல மாகவே புகைப்படங்களை இணைக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் விரும்புகின்றனர்.
அவ்வாறு பதிவேற்ற வேண் டிய புகைப்படம் 10 கிலோ பைட் அளவுக்கு குறைவாக வும், திருத்தங்களை மேற்கொள் ளும்போது, அந்த திருத்தங்களை சரிபார்ப்பதற்கு நம்மிடம் இருக்கும் அரசு சார்பில் வழங்கப்பட்ட, ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணம் 100 கிலோ பைட்டுக்கு குறை வாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் இருந்தால், பதி வேற்றம் செய்ய முடியாது. அரசு அறிவுறுத்தியவாறு புகைப்படங் கள் மற்றும் ஆவணங்களின் கிலோ பைட் அளவை மாற்றத் தெரி யாமல் அட்டைதாரர்கள் அவதிப் பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக கொடுங்கை யூரைச் சேர்ந்த ஒருவர் கூறும் போது, “பள்ளிக் கல்வித் துறை யின் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற் காக விண்ணப்பிக்கும் இணைய தளத்தில் புகைப்படம் மற்றும் ஆவணங்கள் எத்தனை கிலோ பைட்டாக இருந்தாலும், நாம் பதிவேற்றினால், அந்த இணைய தளமே, தனக்கு தேவையான கிலோ பைட்டில் மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. இதுபோன்ற நவீன தொழில்நுட்ப வசதியை புகுத்தி, உணவுப்பொருள் வழங்கல் இணையதளத்தையும் மேம்படுத்த வேண்டும்” என்றார்.
இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இணைய தளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT