Published : 26 Jul 2017 10:12 AM
Last Updated : 26 Jul 2017 10:12 AM

சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் பார்த்துக்கொண்டால் கொசுத் தொல்லை இல்லாத சென்னை மாநகரம் சாத்தியமாகும்: சென்னை மாநகராட்சி தகவல்

பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங் களில் நீர் தேங்காமல் பார்த்துக் கொண்டால் கொசுத் தொல்லை இல்லாத சென்னை மாநகரை உருவாக்க முடியும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது. சென்னை யில் ஆண்டுதோறும் ஜூன் மாதத் தில் தொடங்கும் கொசுத் தொல்லை, அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடைந்து, நவம்பர், டிசம்பர் மாதங்களில் படிப்படியாக குறையும். சென்னையில் ஏடீஸ் வகை யைச் சேர்ந்த ஈஜிப்டி, ஆல்போபிக்டஸ் கொசுக்கள்தான் அதிக அளவில் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக மலேரியாவைப் பரப்பும் அனோபிலஸ், யானைக் கால் நோயைப் பரப்பும் கியூ லெக்ஸ் வகைக் கொசுக்கள் உள்ளன.

உயிர்க்கொல்லி ஏடீஸ்

ஏடீஸ் வகைக் கொசுக்கள்தான் டெங்கு போன்ற உயிரிழப்பை ஏற் படுத்தும் வைரஸ்களை பரப்புகின் றன. இவை தூய நீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன. குறிப்பாக, மனிதனால் தூக்கி எறியப்படும் தேங்காய் சிரட்டைகள், நீர் தேங்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்தப்படாத டயர்கள் மற்றும் பாத்திரங்களில் தேங்கியிருக்கும் மழைநீரில்தான் இவை உற்பத்தியாகின்றன. இவை உற்பத்தியான இடத்திலிருந்து 300 மீட்டர் வரை பறந்து சென்று கடிக்கக்கூடியவை. பெரும்பாலும் 50 மீட்டர் சுற்றளவில் வீடு களில் இருள் சூழ்ந்த மறைவிடங் களில் வசிக்கும் இவை, பகல் நேரங்களில் கடிக்கக்கூடியவை.

முட்டையிடும் முறை

இந்த கொசுக்கள், குறைந்த அளவு நீர் தேங்கியிருக்கும் பொருளின், நீர் பரப்புக்கு மேல் உள்ள ஈரப்பதமான பகுதிகளில் முட்டையிடுகின்றன. மழையால் நீர்ப்பரப்பு உயரும்போது, முட் டைகளில் இருந்து புழுக்கள் உருவாகி, 7 நாட்களில் அவை முழு கொசுக்களாக மாறுகின்றன. மலேரியாவைப் பரப்பும் அனோ பிலஸ் கொசுக்கள் அதிகாலை நேரத்திலும், யானைக்கால் நோயைப் பரப்பும் கியூலெக்ஸ் கொசுக்கள் மாலை 6 மணிக்கு பிறகும் கடிக்கக்கூடியவை. இவை அசுத்தமான நீரில் கொத் துக் கொத்தாக முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.

ஒழிப்பது எப்படி?

கொசுக்களைப் பொதுமக்களே ஒழிக்கும் விதம் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் தற்போது ஏடீஸ் வகை கொசுக்கள்தான் அதிகமாக உள்ளன. இவை நமது வீடுகளைச் சுற்றியுள்ள குறைந்த அளவு நீர் தேங்கும் பகுதிகளில் இருந்துதான் உற்பத்தியாகின்றன. அதனால் நாமே வாரத்துக்கு ஒருமுறை, வீடுகளைச் சுற்றி ஆய்வு செய்து, நீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை அழிக்கலாம். மாநகராட்சி பணியாளர்களும் கொசு உற்பத்தியாகும் பொருட்களைக் கண்டுபிடித்து அழித்து வருகின் றனர். பல வீடுகளில் மாநக ராட்சி ஊழியர்களை உள்ளே விடு வதில்லை. இதனால் அவர்களின் வீடுகளில் உற்பத்தியாகும் கொசுக்கள், சுற்றுப்புறங்களில் உள்ளவர்களைக் கடிக்கிறது. கொசு ஒழிப்பு பணியை ஒரு வீட்டில் செய்தால் பலன் தராது. ஒரே நேரத்தில் அனைத்து வீடுகளிலும் செய்ய வேண்டும். குறிப்பாக சுற்றுப்புறங்களில் பொதுமக்கள் நீர் தேங்காமல் பார்த்துக்கொண்டால், சென்னையை கொசுத்தொல்லை இல்லாத நகரமாக மாற்ற முடியும். மேலும் கொசுக்கள் தொடர்பான புகார்களை, மாநகராட்சியின் இலவச புகார் எண்ணான 1913-யில் தொடர்புகொண்டும் தெரிவிக்கலாம்.

உயிரிழப்பை தடுப்பது எப்படி?

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு டியூப் லைட் மற்றும் சூரிய வெளிச்சத்தைப் பார்த்தாலே கண் வலி ஏற்படும். உடலின் அனைத்து மூட்டுகளிலும் வலி ஏற்படும். உடல் சோர்வும் ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தாலே உடனடியாக அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வந்துவிட வேண்டும். இதன் மூலம் உயிரிழப்பை தடுக்க முடியும். மேற்கூறிய அறிகுறிகள் தெரியவந்த நிலையில், உள்ளூர் மருத்துவரைப் பார்த்து 2 நாட்கள் மருந்து பெற்று செல்வது, நிலைமை சற்று மோசமாகும்போது, அருகில் உள்ள போதிய வசதி இல்லாத மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது, ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் எண் ணிக்கை அதிக அளவில் குறைந்து, மோசமான நிலையில் அரசு மருத்துவமனைகளுக்கு செல்வ தால்தான் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x