Published : 24 Jul 2017 10:09 AM
Last Updated : 24 Jul 2017 10:09 AM
தமிழக நிதித்துறை தகவல் சென்னை கடந்த 2016-17-ம் நிதியாண்டில் சிறுசேமிப்பு திட்டங்கள் மூலம், தமிழகத்தில் ரூ.20 ஆயிரத்து 737 கோடியே 29 லட்சம் வசூலிக் கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிதி அமைச்ச கத்தால் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அஞ் சலகங்கள் மூலம் செயல்படுத் தப்படுகின்றன. இதில், அஞ்சலக சேமிப்பு கணக்கு, 5 ஆண்டுகள் வரையிலான அஞ்சலக கால வைப்பு நிதி, அஞ்சலக தொடர் வைப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், பொன்மகன் பொது வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி கணக்கு வைப்பு திட்டத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்திரம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ரூ.2,916 கோடி முதிர்வுத் தொகை இதில், செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு கடந்த ஏப்ரல் முதல் 8.4 சதவீதமும், செல்வமகன் பொது வைப்பு நிதிக்கு 7.9 சதவீதமும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கு 8.4 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் சிறுசேமிப்பு கணக்கு தொடங்குவோரின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரத்து 737 கோடியே 29 லட்சம் வசூலாகியுள்ளது. இதில், பொதுமக்களுக்கு திரும்ப கொடுத்த தொகை 17 ஆயிரத்து 227 கோடியே 19 லட்சமாகும். தொடர்ந்து இந்த 2017-18-ம் நிதியாண்டில், மே மாதம் வரை ரூ.4 ஆயிரத்து 469 கோடியே 76 லட்சம் வசூலிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு 2 ஆயிரத்து 916 கோடியே 7 லட்சம் முதிர்வு தொகை வழங்கப்பட்டுள்ளது. குறைந்த வைப்புத் தொகை இது தொடர்பாக நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழகத்தில், கடந்த 2014 முதல் பொன்மகள், பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் அதிகளவில் பொதுமக் கள் கணக்கு தொடங்கியுள்ளனர். கடந்தாண்டு மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது. அதன்பின், பொதுத் துறை, தனியார் வங்கிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. ஒவ் வொரு பண பரிவர்த்தனைக்கும் குறிப்பிட்ட தொகை விதிக்கப்பட் டது. வங்கி நடவடிக்கைகளும் சிக்கலாகின.
இந்த நேரத்தில் குறைந்த வைப்புத் தொகையுடன் அதிகளவில் அஞ்சலக கணக்கு களைப் பொதுமக்கள் தொடங்கினர். இவற்றின் மூலம் கடந்தாண்டு இறுதியில் கூடுதல் தொகை வசூலா னது. மேலும், தற்போது பெண் முகவர்கள் அதிகளவில் நியமிக்கப் பட்டு, இத்திட்டங்கள் குறித்து மத்திய அரசு தொடர்ந்து விளம்பரப்படுத்தி, பொதுமக்கள் மத்தியில் அதிகள வில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படு கிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT