Published : 27 Feb 2014 12:00 AM
Last Updated : 27 Feb 2014 12:00 AM
மதவாத எதிர்ப்பு’ என்ற ஆயுதத் தைத் தூக்கிப் பிடித்திருக்கும் கட்சிகள், பாஜக அணியை மத வாத கூட்டணி என விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. இதைத் தகர்த்து சிறுபான்மையினருக்கு பாஜக மீது நம்பிக்கை ஏற்படுத்தி, அவர்களை அரவணைக்கும் முயற் சியில் இறங்கி இருக்கிறது தமிழக பாஜக.
நரேந்திர மோடியும் ராகுல் காந்தியும் நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் உள்ளனர். ’சிறு பான்மையினர் நலனுக்கு எதிரான கட்சி பாஜக’ என்கிறார் ராகுல். மதவாத அரசியலில் ராகுல் தான் ஈடுபடுகிறார்’ என்கிறார் மோடி.
இந்நிலையில், ’பாஜக மதவாத கட்சி’ என்பதை துடைத்து எறிவதற் கான வேலைகளில் மும்முரமாய் ஈடுபட்டிருக்கிறது தமிழக பாஜக.
அண்மையில், வண்டலூரில் மோடி கலந்து கொண்ட கூட்டத் தில் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் முனைவரி பேகம், “நரேந்திர மோடி ஆட்சி நடத்தும் குஜராத்தில் முஸ்லிம்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர். பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி இல்லவே இல்லை” என்று சான்றளித்தார். இதேபோல், நரேந்திர மோடியை கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரன் சமீபத் தில் சந்தித்தது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், வடசென்னை மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் டி.சை மன் தலைமையில் சென்னையில் ‘தமிழ்நாடு கிறிஸ்தவ மத போதகர்கள் மாநாடு’ திங்கள் கிழமை நடைபெற்றது. நூற்றுக்கும் அதிகமான கிறிஸ்தவ மத போதகர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.
கன்னியாகுமரி சென்றுவிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், ’இந்த மாநாட்டில் தன்னால் கலந்து கொள்ளமுடியாததற்கு மிகவும் வருந்துவதாக’ மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு தகவல் தெரிவித்திருந்தாராம்.
இந்த மாநாட்டில் பேசிய பாஜக தலைவர்கள், ’’பல மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. 70 சதவீதம் கத்தோலிக்க கிறிஸ்தவர் கள் வாழும் கோவா மாநிலத்திலும் பாஜக ஆட்சிதான். அங்கே இரண்டு அமைச்சர்கள் கிறிஸ்தவர்கள்.
மதவாத கட்சியாக இருந்தால், அறிவுஜீவிகள் அதிகம் வாழும் கோவாவில் பாஜக எப்படி ஆட்சி யைப் பிடித்திருக்க முடியும்? குஜராத்தில் சலையா நகராட்சியில் உள்ள கவுன்சிலர்களில் 27 பேர் முஸ்லிம்கள். இவர்கள் அத்தனை பேருமே பாஜகவைச் சேர்ந்தவர்கள். இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT