Published : 31 Jul 2017 09:00 AM
Last Updated : 31 Jul 2017 09:00 AM

திருப்பூர் தொழில்துறையை முடக்கிய ஜிஎஸ்டி: சரிவை சந்திக்கும் பின்னலாடை நகரம்

‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற முழக்கத் துடன் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு நட வடிக்கையை மத்திய அரசு கடந்த ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தியது. ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், ஜிஎஸ்டி என்பது ஒருமுனை வரியல்ல. பலமுனைவரியாகவே தெரிகிறது என்கின்றனர் திருப்பூர் சிறு முதலீட்டாளர்கள்.

திருப்பூர் ஆடிட்டர் எஸ்.பாலாஜி:

பனியன் துணிக்கு 5 சதவீதம் வரி துணியை வெட்டியபிறகு செஸ்ட் எம்ப்ராய் டரிங் உள்ளிட்ட ஜாப்ஒர்க் தொழில் களுக்கு 18 சதவீதம் வரி. பின்னலாடை உற்பத்தியைச் சார்ந்து தையல், பிரிண்டிங் உள்ளிட்ட ஜாப்ஒர்க் நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கில் திருப்பூரில் உள்ளன. ஆனால் நிட்டிங், டையிங், பிளீச்சிங், ரைஸிங், ரோல்வாசிங், காம்பேக்டிங், ரோட்டரி பிரிண்டிங் உள்ளிட்ட பல்வேறு பின்னலாடை சார்ந்த தொழில்களுக்கு ஜிஎஸ்டி 5 சதவீதம்.

குடும்பத்தில் 5 பேர் இருக்கிறார் கள் என்றால், அவர்கள் குடிசைத் தொழில்போல் தையல் பணியில் ஈடுபடுபவர்கள். இவர்களுக்கு 18 சதவீதம் வரி. இவர்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரியை ஏற்றுமதியாளர்கள் திரும்பப் பெறலாம் என்பது விதி. ஆனால், எப்படி பெற வேண்டும் என்பது இதுவரை யாருக்கும் புலப் படவில்லை. ஆண்டு வர்த்தகம் ரூ. 20 லட்சத்துக்குள் இருந்தால் ஜிஎஸ்டி பதிவெண் தேவையில்லை. ஜிஎஸ்டி எண் இல்லாத ஒருவரிடம், ஏற்றுமதியாளர் தொழில் செய்யும் போது, அரசு ‘ரிவர்ஸ் சார்ஜ் மெக் கானிசம்’ என்ற ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதாவது, ஜிஎஸ்டி பதிவெண் இல்லாத ஜாப் ஒர்க்கரிடம், ஏற்றுமதியாளர்கள் தொழில் செய்ய நேர்ந்தால், ஏற்றுமதியாளரே 18 சதவீத வரியை செலுத்த வேண்டும். இதனால் ஒரு ஜாப்ஒர்க்கரின் ஆண்டு வர்த்தகம் 20 லட்சத்துக்குள் இருந்தாலுமே ஜிஎஸ்டி பதிவெண் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கவலையில், சிறு முதலீட்டாளர்கள் உள்ளனர்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 3 மாதத்துக்கு ஒருமுறை என்பதை மாற்றி, அதில் நடைமுறை சிக்கல் கள் அதிகளவில் இருப்பதால் வாரம் ஒருமுறையோ மாதம் இரு முறையோ நடத்தப்பட்டால் மட்டுமே சிக்கல்களை தீர்க்க முடியும் என்றார்.

ஆதாயம் என்பது மாயை

திருப்பூர் சிஸ்மா அமைப்பின் பொது செயலாளர் கே.எஸ்.பாபுஜி:

மத்திய அரசின் முழக்கத்துக்கும் நடைமுறைக்கும் சம்பந்தம் இல்லை. ஜிஎஸ்டியால் ஆதாயம் என்பது மாயை. ஒரு தொழிலாளர் ரூ.20,000 சம்பாதிக்கிறார் என்றால் 3,500 வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு 75 லட்சம் வர்த்தகம் செய்பவர்கள், 1 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என மாநில அரசு சொல்லியுள்ளது. இதன்கீழ் பின்னலாடை சார்ந்து இயங்கும் சிறு முதலீட்டாளர்களை கொண்டு வரலாம்.

ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி என்பது, பின்ன லாடைத் துறையை வர்த்தக ரீதியாக பெரும் சரிவை சந்திக்கும். பணக்காரர்களுக்கு ஒரு வரியாகவும், ஏழைகளுக்கு ஒரு வரியாகவும் ஜிஎஸ்டி உள்ளது. பெரும் நிறுவனங்களிடம் வாங்கி தொழில் செய்பவர்களுக்கு, 18 சதவீத ஜிஎஸ்டியில் இருந்து 5 சதவீதமாக விலக்கு அளிக்க வேண்டும். ஆகஸ்ட் 5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். திருப்பூரை பொறுத்தவரை இரண் டரை லட்சம் தொழிலாளர்கள் ஜாப்ஓர்க் தொழிலில் உள்ளனர்.

வேறு தொழில்

திருப்பூர் டீமா அமைப்பின் தலைவர் எம்.பி.முத்துரத்தினம்:

சிறு முதலீட்டாளர்களால் உருவான நகரம் திருப்பூர். ஜிஎஸ்டியால் உள்நாட்டு வர்த்தகம் 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தொழில் முடங்கியுள்ளது. 100 கோடிக்கு வியாபாரம் செய்ப வர்களுக்கு 5 சதவீத வரியும், 1 லட் சத்துக்கு வியாபாரம் செய்பவர் களுக்கு 18 சதவீத வரியும் விதிக் கப்பட்டுள்ளது. 3 மாதங்களில் ஜிஎஸ்டி முழுமையாக அமல்படுத்தி னால், ஜாப்ஒர்க் தொழிலாளர்கள் வேறு தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றார்.

ஏற்றுமதி பாதிக்கும்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலாளர் டி.ஆர்.விஜய குமார்:

ஜாப்ஒர்க் தொழிலாளர் களுக்கு ஜிஎஸ்டி வரியை 5 சத வீதமாக குறைக்க மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள் ளோம். அது பரீசிலனையில் உள் ளது. பின்னலாடையின் சார்பு தொழில் பாதிக்கப்பட்டால், ஏற்றுமதியும் பாதிக்கப்படும். ஆகவே வரி விதிப்பை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x