Published : 24 Jul 2017 10:14 AM
Last Updated : 24 Jul 2017 10:14 AM

பிரச்சினைக்குரிய கிணறு அமைந்திருக்கும் ஓபிஎஸ் மனைவியின் நிலம் கைமாறியது: லெட்சுமிபுரம் கிராம மக்கள் குற்றச்சாட்டு

பிரச்சினைக்குரிய கிணறு அமைந் திருக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனைவியின் இடம், பேச்சுவார்த்தைக்கு முன்ன தாகவே கைமாறிவிட்டதாக லெட்சுமிபுரம் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது லெட்சுமிபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு சொந் தமான கிணறு அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி தோட்டத் தில் மெகா கிணறு வெட்டப்பட்ட தால் ஊராட்சி கிணற்றில் தண்ணீர் வற்றியது.

இதையடுத்து கிணற்றை ஊராட்சிக்கு ஒப்படைக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. கிராமக் குழுவி னருடன் ஓ.பன்னீர்செல்வம் நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது லெட்சுமிபுரம் ஊராட் சிக்குத் தேவையான தண்ணீரை பிரச்சினைக்குரிய கிணற்றில் இருந்து 90 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம், அதன் பிறகு நிலத்தை கிராம மக்களே வாங்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட் டால் வேறு ஒருவருக்கு விற்று விடுவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த நிலத்தை வாங்க கிராமக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெயபாலன், கிராமக் கமிட்டித் தலைவர் கார்த்திகேயன் உட்பட லெட்சுமிபுரம் ஊராட்சி கிராமக் குழுவினர் தேனி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடாசலத்தை நேற்று முன்தினம் சந்தித்தனர்.

நிலத்துக்கான ஆவணங்களை பார்க்க வேண்டும் என அவர்கள் ஆட்சியரிடம் தெரிவித்தனர். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகரனிடம் கேட்டுக் கொள்ளுமாறு ஆட்சியர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கிராமத்தின ருக்கு விற்பதாகக் கூறிய பிரச்சினைக்குரிய கிணறு மற்றும் இடத்தை சுப்புராஜ் என்பவருக்கு விற்றுவிட்டதாக கிராமக் குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர். நிலம் குறித்த வில்லங்க சான்றில் இந்த விவரம் தெரிய வந்துள்ளதாகக் கூறுகின்றனர். நிலத்தின் ஆவணங்களை மாற்றிவிட்டே ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளார் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த தகவல் பரவியதை யடுத்து லெட்சுமிபுரம் கிராமத்தில் மக்கள் பங்கேற்ற அவசர ஊர்க் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் இந்த பிரச்சினை குறித்து நீண்டநேரம் விவாதிக்கப்பட்டது.

சுப்புராஜை பேச்சுவார்த் தைக்கு அழைத்தனர். இப்பிரச் சினை குறித்து அவரிடம் கிராம மக்கள் கேட்டனர். அந்த இடத்தை தங்களிடம் விற்குமாறு கிராம மக்கள் சுப்புராஜை வலியுறுத் தினர். இதில் தீர்வு ஏற்படாததால் அடுத்த கூட்டத்தில் முடிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x