Published : 09 Jul 2017 11:17 AM
Last Updated : 09 Jul 2017 11:17 AM
தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுவதால் தங்களுக்கு ஏற்பட்டு வரும் இழப்பைப் போக்க எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விற்பனை யாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா யின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வந்தன.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்யும் முறையை அறிமுகப்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவுசெய்தன. அதன்படி, கடந்த ஜூன் 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள 58,000 பெட்ரோல் நிலை யங்களில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அவ் வாறு தினந்தோறும் விலை நிர்ணயிக்கப்படுவதால், இழப் பைச் சந்திக்க நேரிடுவதாக பெட் ரோலிய விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
4,500 விற்பனை நிலையம்
இதுதொடர்பாக தமிழ் நாடு பெட்ரோலிய விற்பனை யாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி ‘தி இந்து’விடம் கூறியதாவது: தமிழகத்தில் 4,500 பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை, மதுரை, கோவை, கரூர், சேலம், திருச்சி, திரு நெல்வேலி ஆகிய மாவட்டங் களில் இருந்து பிற மாவட்ட விற்பனையாளர்களுக்கு பெட் ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுகிறது.
எரிபொருள் தீரும்நிலையில், அங்கிருந்து தேவையான எரிபொருளை பெறுவதற்கு குறைந்தது 4 நாட்களுக்கான இருப்பையாவது நாங்கள் வைத்திருக்க வேண்டும். அப் போதுதான், வாடிக்கையாளர் களுக்கு தடையின்றி எரி பொருளை அளிக்க முடியும்.
முன்பு பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயித்து வந் தனர். இதனால், எப்போது விலை குறையும் என்று விற்பனையாளர்களால் கணிக்க முடிந்தது. எனவே, வாடிக்கையாளருக்கு விநி யோகிக்க தேவையான இருப்பை வைத்துக்கொண்டு, விலை குறைந்தபிறகு பெட் ரோல், டீசலை கொள்முதல் செய்து வந்தோம். இதனால், விலை குறைந்தாலும் ஏற் கெனவே எங்களிடம் உள்ள எரிபொருள் இருப்பால் மிகக் குறைவானஅளவே இழப்பு ஏற்பட்டு வந்தது.
டீலர் மார்ஜினில் இழப்பு
விற்பனையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2.58-ம், டீசலுக்குரூ.1.63-ம் டீலர் மார்ஜின் தொகையாக வழங்கப்படுகிறது.
தற்போது தினசரி விலை நிர்ணயத்தால், குறைந்தபட்ச இருப்பை நாங்கள் விற்று முடிப்பதற்குள் அடுத்தடுத்த நாட்களில் விலை குறையும் போது, டீலர் மார்ஜின் தொகையில் இருந்தே இழப்பு ஏற்படுகிறது. கடந்த ஜூன் 15-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.4.21-ம், டீசல் ரூ.2.57-ம் குறைந்துள்ளது.
இதனால், ஒவ்வொரு விற் பனையாளருக்கும் சுமார் ரூ.50,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே நிலை, வரும் 3 மாதங்களுக்கு நீடித்தால் முதலீட்டில் இருந்தே இழப்பு ஏற்படும் நிலை உருவாகும்.
மேலும், தற்போது இந்தி யாவில் 65 சதவீத பெட்ரோலிய விற்பனையாளர்களுக்கு டீலர் மார்ஜின் முழுமையாகக் கிடைப்பதில்லை. இதனால், ஏற்கெனவே பாதிக்கப்பட்டு வந்த விற்பனையாளர்களுக்கு தினசரி விலை நிர்ணயம் கூடுதல் சுமையாகஅமைந்துள்ளது.
உரிய நடவடிக்கை தேவை
விற்பனையாளர்கள் ஒப்புக் கொண்டதால்தான் எண் ணெய் நிறுவனங்கள் தினசரி விலை நிர்ணயத்தை அமல் படுத்தியுள்ளன. எனவே, நுகர்வோர், விற்பனையாளர் கள் பாதிக்காத வகை யில் எண்ணெய் நிறுவனங் கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT