Published : 01 Nov 2014 10:46 AM
Last Updated : 01 Nov 2014 10:46 AM

சோமாலிய கடற்கொள்ளையரிடம் சிக்கிய மாலுமி விடுதலை

சோமாலிய கடற்கொள்ளையரிடம் 4 ஆண்டுகளாக சிக்கித்தவித்த புன்னக்காயல் மாலுமி விடுதலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயலை சேர்ந்தவர் டனிஸ்டன். இவர், மும்பையை சேர்ந்த ஓ.எம்.சி.ஐ. என்ற கப்பல் நிறுவனத்துக்கு சொந்தமான `ஆஸ்பால்ட் வென்சர்’ என்ற கப்பலில் மாலுமியாக பணி யாற்றினார்.

இந்த கப்பலை சோமாலியா நாட்டு கடற்கொள்ளையர்கள் கடந்த 2010 செப்டம்பர் 28-ல் சிறைபிடித்தனர். அடுத்த 6 மாதத்தில் 8 மாலுமிகளை கொள்ளையர்கள் விடுவித்தனர். மீதமுள்ள 7 மாலுமிகளை மட்டும் கடந்த 4 ஆண்டுகளாக தங்கள் வசம் சிறைவைத்திருந்தனர். இவர்களில் டனிஸ்டனும் ஒருவர்.

மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியால் டனிஸ்டன் உள்ளிட்ட 7 பேரையும், சோமாலிய கடற்கொள்ளையர்கள் நேற்று முன்தினம் விடுதலை செய் துள்ளனர். இத்தகவலை டனிஸ்டன் தொலைபேசியில் குடும்பத் தினரிடம் தெரிவித்துள்ளார். 3 நாட் களில் அவர் தூத்துக்குடி வருவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x