Published : 19 Nov 2014 10:50 AM
Last Updated : 19 Nov 2014 10:50 AM
சென்னை உட்பட நாடெங்கிலும் உள்ள செட்டாப் பாக்ஸ் கேபிள் டி.வி வாடிக்கையாளர்களுக்கு, மாதாந்திர கட்டணம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை மட்டும் பார்ப்பதற்கும் தொலைத்தொடர்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் உத்தரவு வழிவகுத்துள்ளது.
நாட்டில் சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் செட்டாப் பாக்ஸை பயன்படுத்தி கேபிள் டிவி சானல் களை டிஜிட்டல் (DAS) முறையில் விநியோகிக்கும் திட்டத்தினை மத்திய அரசு கடந்த 2012 நவம்பர் முதல் கட்டாயமாக்கியது. அதைத் தொடர்ந்து, சென்னையில் கேபிள் தொழிலில் ஈடுபட்டு வந்த எம்எஸ்ஓ-க்கள் எனப்படும் மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்கள், அதற்கான உரிமத்தினை மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்திடம் பெற் றனர். நாடு முழுவதும் இத்திட் டத்தினை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
தமிழகத்தில் 40 லட்சம் பேர் டிஷ் ஆன்டனா (டிடிஎச்) மூலம் தனியார் சானல்களைப் பார்க்கி றார்கள். மீதமுள்ளவர்கள் கேபிள் இணைப்பு மூலம் பார்க்கிறார்கள். 60 லட்சம் பேர் அரசு கேபிள் டிவி இணைப்பினை பெற்றுள்ளனர்.
சென்னையில் செட்டாப் பாக்ஸ் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் போதிலும், ஏராளமான வீடுகளில் இன்னும் ‘அனலாக்’ முறையி லேயே சிக்னல்கள் வழங்கப் படுகின்றன.
இந்நிலையில், எம்எஸ்ஓக்கள் மற்றும் தனியார் தொலைக் காட்சி ஒளிபரப்பு நிறுவனங்களுக் கிடையே ஏற்படும் பிரச்சினை களைத் தீர்ப்பதற்காக ஏற்படுத்தப் பட்டுள்ள தொலைத்தொடர்பு குறைதீர் மேல்முறையீட்டு தீர்ப் பாயம் (TDSAT), ஸ்டார் டிவி குழுமம் மற்றும் ஹாத்வே எம்எஸ்ஓ நிறுவனம் தொடர்பான வழக்கில் ஒரு தீர்ப்பினை கடந்த செப்டம்பர் 26-ம் தேதி வெளி யிட்டது.
அதன்படி, நாடு முழுவதிலும் ஒரே சீரான விலையில் தங்களது பொக்கேவில் உள்ள சானல்களை தனித்தனியாக எம்எஸ்ஓ-க்களுக்கு தரவேண்டும் என உத்தர விடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஸ்டார் குழுமம், எம்எஸ்ஓக் களுக்கு வழங்கும் சானல்களின் விலையினை இந்த மாதம் முதல் திருத்தி அமைத்துள்ளது. இதனை மற்ற தனியார் தொலைக்காட்சி குழுமங்களும் பின்பற்றும்போது, செட்டாப் பாக்ஸ் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள், தங்க ளுக்குப் பிடித்த சானலை மட்டுமே பார்க்கும் நிலை ஏற்படும். அதனால் செட்டாப் பாக்ஸ் மூலம் பார்க்கப்படும் கேபிள் கட்டணம் குறையும் என இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் கூறு கின்றனர்.
இது குறித்து எம்எஸ்ஓ மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள் கூறிய தாவது:
சென்னையில் 40 லட்சம் கேபிள் வாடிக்கையாளர்கள் உள் ளனர். அதில் 10 லட்சம் பேர் டிடிஎச் இணைப்பு பெற்றுள்ள னர். மீதமுள்ளவர்கள், எஸ்சிவி, டிசிசிஎல் உள்ளிட்ட எம்எஸ் ஓக்களின் அனலாக் (25 லட்சம்) மற்றும் செட்டாப் பாக்ஸ் இணைப் புகளை (சுமார் 5 லட்சம் பேர்) பெற்றுள்ளனர். அரசு கேபிள் டிவியும் சில இடங்களில் அனலாக் முறையில் சானல்களை வழங்கி வருகிறது. டிஜிட்டல் உரிமத் துக்காக அரசு கேபிள் நிறுவனம், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது.
டிசிசிஎல், ஜேக், கிரிஸ்டல், ஆதார் உள்ளிட்ட 9 எம்எஸ்ஓக்கள் செட்டாப் பாக்ஸ் மூலம் கேபிள் டிவி சேவையினை வழங்கி வருகின்றனர். ஸ்டார், சன், ஜீ, ஐகாஸ்ட் போன்ற தொலைக் காட்சி நிறுவனங்களின் பொக்கேக் களை வாங்கி அதனை வாடிக்கை யாளர்களுக்குத் தருகிறோம். உதாரணத்துக்கு, ஸ்டார் குழும பொக்கேவில் 30 சானல்கள் உள்ளன. ஜி (zee) பேக்கேஜில் 42 சானல்கள் உள்ளன. பிடித் தாலும், பிடிக்காவிட்டாலும் அதில் பாதி சானல்களையாவது வாடிக் கையாளர்கள் தற்போது பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் ‘டிடி சாட்’ தீர்ப்பின்படி, ஸ்டார் பொக்கேவில் உள்ள அனைத்து சானல்களையும் (பொக்கே) பார்க்கவேண்டிய தேவை யில்லாமல், இனி ஒவ்வொரு சானலையும் விருப்பத்தில் பேரில் கேட்டுப்பெறலாம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு செலவு குறையும். சென்னையில் தற்போது ஸ்டார் குழுமத்தின் சானல்களுக்கு மட்டும் ‘டிடி சாட்’ உத்தரவினை கேபிள் ஆபரேட்டர்கள் அமல் படுத்தியுள்ளனர்.
இனி வரிசையாக ஜீ டிவி, ‘ஐ காஸ்ட்’(கலர்ஸ்) போன்ற நிறுவனங்களின் தொகுப்புகளில் இருந்தும், வேண்டிய சானல் களை மட்டும் விருப்பத்தின் பேரில் வாடிக்கையாளர்கள் கேட்டுப் பெறும் நிலை ஏற்படும். அதனால், செட்டாப் பாக்ஸ் வாடிக்கை யாளர்கள் குறைவான கட்டணத்தில், விரும்பிய சானல் களை பார்க்கும் நிலை விரைவில் உருவாகும் என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT