Published : 07 Nov 2014 11:51 AM
Last Updated : 07 Nov 2014 11:51 AM

கொள்ளையர்களிடம் சிக்கிய தமிழக மாலுமி தாயகம் திரும்பினார்

சோமாலியா நாட்டில் கடற் கொள்ளையர்களிடம் சிக்கி, 4 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட தமிழக மாலுமி மும்பை வந்தார். அவர் இன்று சொந்த ஊர் திரும்புகிறார்.

தூத்துக்குடி மாவட்டம், புன்னக் காயலை சேர்ந்த லிட்டன் மகன் டனிஸ்டன். இவர், மும்பையைச் சேர்ந்த ஓ.எம்.சி.ஐ. என்ற கப்பல் நிறுவனத்துக்கு சொந்தமான `ஆஸ்பால்ட் வென்சர்’ என்ற கப்பலில் மாலுமியாக வேலை செய்து வந்தார்.

இந்த கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடந்த 28.09.2010-ல் சிறைபிடித்தனர். டனிஸ்டன் உள்பட இந்திய மாலுமிகள் 7 பேரை கடற் கொள்ளையர் கடந்த 4 ஆண்டுகளாக சிறை வைத்திருந்தனர்.

மத்திய அரசு மேற் கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக 7 மாலுமிகளையும் கடந்த மாதம் 29-ம் தேதி சோமாலியா கடற்கொள்ளை யர்கள் விடுதலை செய்தனர்.

கடந்த 3-ம் தேதி விமானம் மூலம் மும்பை வந்த டனிஸ்டனை, அவரது பெற்றோர் ஆரத்தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தனர். 3 நாட்களாக மும்பையில் தங்கியிருந்த டனிஸ்டன் இன்று சொந்த ஊர் திரும்புகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x