Published : 17 Jul 2017 08:19 AM
Last Updated : 17 Jul 2017 08:19 AM
இந்தியாவிலேயே முதல்முறை யாக மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகங்கள், சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 2012-ல் தொடங்கப்பட்டது. சென்னை மாநகரம் முழுவதும் 407 உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
தினமும் 2 லட்சம் பேர் அம்மா உணவகங்களால் பயன்பெறு கிறார்கள். நாளொன்றுக்கு ரூ.20 செலவில் 3 வேளை உணவுத் தேவையை அம்மா உணவகங் கள் பூர்த்தி செய்கின்றன. இங்கு வழங்கப்படும் சுகாதாரமான உணவால், சென்னையில் அசுத்த மான உணவால் ஏற்படும் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் குறைந்துள்ளன. சுகாதாரமற்ற தெருவோர உணவகங்களும் குறைந்துவிட்டன. விலை குறைவு என்பதால் அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
ஏற்கெனவே நிதி பற்றாக் குறையால் அவதிப்பட்டு வரும் சென்னை மாநகராட்சி, மலிவு விலையில் உணவகம் நடத்து வதால் கடும் நிதிச் சுமைக்கு உள்ளாகியுள்ளது. இத்திட்டத்துக் காக, டியூசிஎஸ் கூட்டுறவு நிறுவனத்திடம் இருந்து காய்கறி கள், மளிகை பொருட்கள், சமையல் காஸ் உள்ளிட்டவற்றை சென்னை மாநகராட்சி வாங்குகிறது. கடந்த 7 மாதங்களாக அந்நிறுவனத்துக்கு நிலுவை வைத்து, அத்தொகை சுமார் ரூ.28 கோடிக்குமேல் உயர்ந்துள்ளது. சென்னை மாநகராட்சியால் நிலுவையை செலுத்த முடியாத நிலையில், டியூசிஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்நிலையில், அம்மா உண வகங்களின் எண்ணிக்கையை மாநகராட்சி நிர்வாகம் குறைத்து விடுமோ அல்லது திட்டத்தை கைவிட்டுவிடுமோ என்ற அச்சம், பொதுமக்கள் மத்தியில் எழுந் துள்ளது. இது தொடர்பாக, இத் திட்டத்தை செயல்படுத்திய முன்னாள் மாநகராட்சி சுகாதார அலுவலர் பி.குகானந்தம் கூறியதாவது:
அம்மா உணவகத்தால் தினமும் 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பயன்பெறுவது ஒரு பக்கம் இருந்தாலும், 5 ஆயிரம் மகளிருக்கு வேலை கிடைத்துள் ளது. அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது.
அம்மா உணவகத்தை நடத்துவதற்கு முக்கிய சவாலாக இருப்பது நிதி ஆதாரமும், நிர்வகிப்பும், மனித வளமும் தான். அம்மா உணவகத்தால் நாளொன்றுக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் வருவாய் கிடைக்கிறது. 5 ஆயிரம் பணியாளர்களுக்கு தினமும் ரூ.300 வீதம் ரூ.15 லட்சம் ஊதியமாக கொடுக்க வேண்டியுள்ளது. மளிகை, காய்கறி செலவு இல்லாமல், ஊதியம் கொடுக்க மட்டுமே, நாளொன்றுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மாநகராட்சிக்கு தேவைப் படுகிறது. இதையெல்லாம் சமாளித்து, உணவகத்தை நடத்து வது சிரமம். இந்தச் சூழலில் அம்மா உணவகத்தை அவசியம் மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்.
அதற்கு முதல்கட்டமாக, நிதி இழப்பை ஈடு செய்யும் வகையில், மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக, இட்லி விலையை ரூ.1-லிருந்து ரூ.3 ஆகவும், பொங்கல் விலை ரூ.5-லிருந்து ரூ.7 ஆகவும், அரிசி உணவு வகைகள் ரூ.5-லிருந்து ரூ.7 ஆகவும், சப்பாத்தி ரூ.3-லிருந்து ரூ.5 ஆகவும் உயர்த்தலாம்.
உணவு விற்பனை இல்லாத நேரங்களான காலை 10 முதல் பிற்பகல் 12.30 வரையும், பிற்பகல் 2 முதல் 6 மணி வரையிலும், அம்மா உணவகங்களில், கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைந்து பண்ணை பசுமை காய்கறிகள், மளிகை பொருட்கள், ஊறுகாய், அப்பளம், கேன் குடிநீர் உள்ளிட்ட வற்றை விற்று, உணவகத்தின் வருவாயைக் கூட்டலாம்.
மாநகராட்சி பொதுசுகாதாரத் துறைக்கு அதிக வேலை பளு உள்ள நிலையில், சிரமத்துடன் உணவகத்தை நிர்வகிக்க வேண்டியுள்ளது. அதனால் இதை, மாநகராட்சி கண்காணிப்பில், சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுக் கழகம் போன்ற தனித் துறையின் கீழ் நிர்வகிக்கலாம்.
மேலும் பெருநிறுவனங்களை, பெருநிறுவன சமூக பொறுப் புணர்வு திட்டத்தின் கீழ் உணவகங் களை பராமரிக்கக் கோரலாம். சமூக பங்களிப்புடன் அம்மா உணவகத்தை மேற்பார்வை செய்ய, அப்பகுதியில் உள்ள படித்த இல்லத்தரசிகளை, தன்னார் வலர் முறையில், அரசியல் சாயம் இன்றி நியமிக்கலாம். இத்திட்டம் பெண்கள் வளர்ச்சிக்கான மக்கள் இயக்கமாக மாற வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம், அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு ஏற்படும் நிதி இழப்பை சமாளிக்க முடிவதுடன், அம்மா உணவகமும் நீடித்த வளர்ச் சியைப் பெறும். பெண்களுக்கு இணையாக ஆண்களும் வேலைவாய்ப்பைப் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT