Last Updated : 23 Jul, 2017 01:17 PM

 

Published : 23 Jul 2017 01:17 PM
Last Updated : 23 Jul 2017 01:17 PM

கதிராமங்கல போராட்டத்தில் கைதான பேராசிரியர் ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன்

கதிராமங்கலம் போராட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள பேராசிரியர் ஜெயரமானுக்கு தந்தையின் இறுதி சடங்கில பங்கேற்பதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப்போராட்டம் காரணமாக பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரை போலீஸார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்கள் ஜாமீன் கோரி தஞ்சை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இருமுறை தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இதில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயராமனின் தந்தை உடல் நலக்குறைவால் நேற்று இறந்தார். தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் எனக்கேட்டு ஜெயராமன் உயர் நீதிமன்ற கிளையில் இன்று அவசர மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி ஜெ.நிஷாபானு விசாரித்து, பேராசிரியர் ஜெயராமனுக்கு ஜூலை 26 வரை 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x