Published : 29 Jul 2017 12:53 PM
Last Updated : 29 Jul 2017 12:53 PM

திண்டுக்கல் மாநகர மக்களுக்கு ஒரு மாதத்தில் ரூ.3.60 கோடிக்கு தனியார் லாரிகளில் தண்ணீர் விற்பனை

திண்டுக்கல் மாநகராட்சி பகுதி களில் தனியார் லாரிகள் மூலம் ஒரு நாளைக்கு 40 லட்சம் லிட்டர் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் 12 லட்சம் ரூபாய் வீதம் கடந்த ஒரு மாதத்தில் ரூ.3.60 கோடிக்கு தண்ணீர் விற்பனை நடந்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமான ஆத்தூர் நீர்த்தேக்கம் முற்றிலும் வறண்டுவிட்டது. காவிரி கூட்டுக் குடிநீர் மூலம் தினமும் நான்கு மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே பெறப்படுகிறது. திண்டுக்கல் மாநகர மக்களுக்கு மொத்தம் தேவையான தண்ணீர் ஒரு நாளைக்கு 29 மில்லியன் லிட்டர். ஆனால் கிடைப்பதோ 4 மில்லியன் லிட்டர். இதைக் கொண்டு மாநகராட்சி பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலையில், 45 நாட்களுக்கு மேலாகியும் வார்டு பகுதிகளுக்கு தண்ணீர் வராத நிலையே உள்ளது.

மேலும் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றதால் திண்டுக்கல் நகரில் பெரும்பாலான வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறு களிலும் தண்ணீர் இல்லை. இதை சாதகமாகப் பயன்படுத்தி தனியார் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்து நகரில் 75 வாகனங்களில் தண்ணீர் விற்பனை நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 40 லட்சம் லிட்டர் தண்ணீர் விற்பனை செய்வதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 40 லட்சம் லிட்டர் தண்ணீர் விற்பனை செய்யப்படு வதன் மூலம் திண்டுக்கல் நக ரில் மட்டும் தினமும் 12 லட்சம் ரூபாய்க்கு தண்ணீர் விற்பனை யாகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நகரில் ரூ.3.60 கோடிக்கு தண்ணீர் விற்பனை நடந்துள்ளது.

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறிய தாவது:

திண்டுக்கல் நகரில் தனியார் நீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வாகனங்களில் விற்பனை செய்வது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒரு இடத்தில் தண்ணீர் அதிகம் கிடைக்கிறது என்று அதை முழுமையாக எடுப்பதும் தவறு. இதனால் நீர் ஆதாரத்தை ஒட்டி யுள்ள குடியிருப்பு பகுதிகளின் நீர் ஆதாரம் பாதிக்கப்படும்.

மேலும் சுத்திகரிக்கப்படாத தண்ணீர் வழங்கப்படுவதால் நோய் தொற்று அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது. தனியார் தண்ணீர் விற்பனையை முறைப்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற் றுடன் ஆலோசித்து வருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x