Published : 14 Jul 2017 10:15 AM
Last Updated : 14 Jul 2017 10:15 AM
அதிமுக, திமுகவுக்கு அடுத்ததாக தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி அமைக்கும் பணியைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளது பாஜக.
ஜனசங்கத்தை தோற்றுவித்த தீனதயாள் உபாத்யாய நூற் றாண்டை முன்னிட்டு, நாடு முழு வதும் பாஜக சார்பில் மக்கள் தொடர்பு பேரியக்கம் நடைபெறு கிறது. கட்சியில் உறுப்பினர் சேர்த்தல், மத்திய அரசின் சாதனை களை கிராமங்கள்தோறும் கொண்டு சேர்த்தல் ஆகிய பணிகளை, பாஜகவின் தேசிய தலைவர்கள், மாநில முதல்வர்கள், அமைச் சர்கள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் வரை தற்போது முழுவீச்சில் மேற்கொண்டுள் ளனர்.
தமிழகத்தில் மத்திய இணை யமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகி கள் கடந்த 23-ம் தேதி முதல் ஒவ்வொரு மக்களவைத் தொகுதி யிலும் களப்பணியில் ஈடுபட்டுள்ள னர். ஒவ்வொரு நிர்வாகிக்கும் 3 பூத்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பூத்திலும் 30 பேரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்பது திட்டம்.
உறுப்பினர்களாக சேர்ந்தவர் களுக்கு உடனுக்குடன் உறுப் பினர் அடையாள அட்டை வழங் கப்படுகிறது. உறுப்பினர்களின் வீட்டுக் கதவில் தீனதயாள் உபாத்யாயா மற்றும் பிரதமர் மோடியின் படம் பொறித்த ஸ்டிக் கர்களை ஒட்டுவது, மரக்கன்றுகளை நடுவது, 30 உறுப்பினர்கள் சேர்ந்த பிறகு அப்பகுதியில் கட்சிக் கொடியை ஏற்றுவது, பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், தூய்மைப் பணியை மேற்கொள் வது, அந்தந்த கிராமவாசிகளின் வீடுகளில் அமர்ந்து சாப் பிடுவது என்றெல்லாம் நிர்வாகி களுக்கு களப்பணிகள் தரப்பட்டுள்ளன.
நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் 3 பூத்களில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் இப்பணியில் ஈடு பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப் பட்ட பூத்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்குகிறார். மக்களோடு கலந்துரையாடி குறைகளை கேட்டறிகிறார். கட்சியில் இணைவோருக்கு அடையாள அட்டைகளை வழங்குகிறார்.
மாஞ்சோலை எஸ்டேட்
திருநெல்வேலி மாவட்டத்தில் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் 5 பூத்களில் களப்பணியை, மாநில பாஜக விவசாய அணி பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் மேற்கொண்டுள்ளார். அவர் கூறும்போது, ``வானொலி யில் பிரதமர் ஆற்றும் உரைகளை மக்களை கேட்கச் செய்வது, இளை ஞர்கள் தங்கள் செல்போன்களில் மோடி ஆப்-ஐ டவுன்லோடு செய்துகொள்ள வைப்பது, அந்தந்த கிராமங்களில் முன்னாள் ராணுவ வீரர்களின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரை சந்திப்பது போன்ற பணியை மேற்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.
42 ஆயிரம் உறுப்பினர்கள்
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் சராசரியாக ஒரு தொகுதிக்கு 1,400 பூத்கள் உள்ளன. ஒரு பூத்துக்கு 30 உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டால் 1,400 பூத்திலும், 42 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் ஜூலை 30-ம் தேதிக்குள் சேர்க்கப்படுவார்கள்.
சமீபத்தில் தமிழகத்துக்கு வந்திருந்த கட்சித் தலைவர் அமித்ஷா தெரிவித்திருந்த மாஸ் டர் பிளானின் தொடக்கம் இது தான் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT