Published : 02 Jun 2016 08:30 AM
Last Updated : 02 Jun 2016 08:30 AM
முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை அரசியல் கட்சியாக மாற்ற நடிகரும் எம்எல்ஏ-வுமான கருணாஸ் முடிவெடுத்துள்ளார்.
மூமுக, அஇமூமுக உள்ளிட்ட முக்குலத்தோர் கட்சிகள் அதிமுகவின அழைப்புக்காக தவம் கிடந்த நிலையில், அதிமுக கருணாஸுக்கு வாய்ப்பளித்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது தனது அமைப்பின் கொடியை பயன்படுத்துவதில் கருணாஸுக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டன. ஆனாலும் ‘நான் அனைவருக்கும் பொதுவானவன்’ என்று சொல்லி வாக்குக் கேட்டார். இந்த நிலை யில், தனது அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றும் முடிவுக்கு அவர் வந்திருக்கிறார்.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, “ராமதாஸ், திருமாவளவன், சரத்குமார் ஆகியோர் எந்தப் பின்னணியில் அரசியல் கட்சிகளை நடத்துகிறார்கள் என் பது நாட்டுக்கே தெரியும். ஆனா லும் அவர்கள் பொதுத் தளத்தில் அரசியல் செய்ய எந்தத் தடங்கலும் இல்லை. ஆனால், எங்களுக்கு ஒரு சுவரொட்டி ஒட்டு வதில் கூட சிக்கல் இருக்கிறது.
ஏழு ஆண்டுகளாக அமைப்பு நடத்தும் நான் எந்த சமு தாயத்துக்கும் எதிராக இதுவரை கருத்துத் தெரிவித்தது இல்லை. எனக்குத் தெரிந்தது தமிழினம், தமிழ் மொழி இந்த இரண்டும் தான். எனது நண்பர்களில் பலபேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான். எனது சொந்த உழைப்பில் கிடைத்த பணத்தைக் கொண்டு ஜாதி - மதம் பார்க்காமல் 153 பேரை பட்டதாரிகளாக்கி இருக் கிறேன். இருந்தாலும் என்னை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் அடையாளம் கொண்டு பார்ப்பது எனக்குப் பிடிக்கவில்லை.
தேர்தல் சமயத்தில் ஆறு கட்சிகளின் கொடிகளையும் எனது காரில் கட்டி இருந்தேன். ஆனால், எங்களது அமைப்பின் கொடியை மட்டும் கட்டக்கூடாது என சிலர் பிரச்சினை செய்தார்கள். நாங்கள் எந்தத் தவறும் செய்யாதபோது எதற்காக இந்த நிபந்தனை? இதற்குக் காரணம் நாங்கள் அரசியல் கட்சியாக இல்லாமல் தனிப்பட்ட ஒரு அமைப்பாக இருப் பதுதான். எனவேதான் முக்குலத் தோர் புலிப்படை அமைப்பை பதிவு பெற்ற அரசியல் கட்சியாக மாற்ற முடிவெடுத்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அனை வருக்கும் பொதுவானவனாக இருக்கவே விரும்புகிறேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT