Published : 27 Mar 2017 09:54 AM
Last Updated : 27 Mar 2017 09:54 AM
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு ஆராய்ச்சி மையம், அமெரிக்காவில் உள்ள நியூ சர்ச் பவுண்டேஷன் என்ற அமைப்புடன் இணைந்து, மாணவர்களின் பங்களிப்புடன் செயற்கைக்கோள் தயாரித்து விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. அதற்கான மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக ஆய்வறிக்கை சமர்ப் பிக்கும் போட்டியை இணையதளத் தின் மூலம் அறிவித்து நடத்தியது.
தேர்வு பெற்ற 10 கட்டுரைகள்
இதில், இந்தியா முழுவதும் இருந்து வந்த 400 ஆய்வுக்கட்டு ரைகளில் 10 மட்டுமே தகுதியான வையாகத் தேர்வு செய்யப்பட்டன. அதில் ஒன்றாக, திருவாரூர் மாவட் டம் மன்னார்குடியைச் சேர்ந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் தயாரித்த, வளிமண்ட லத்தில் நன்மை செய்யும் பாக்டீரி யாவை உற்பத்தி செய்வது குறித்த ஆய்வுக்கட்டுரை இடம் பெற்றுள் ளது.
இதற்காக, கடந்த மார்ச் 11-ம் தேதி சென்னை கேசிஜி பொறியி யல் கல்லூரியில் நடைபெற்ற விழா வில் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், இஸ்ரோ திட்ட இயக்குநர் டாக்டர் கிஷோர், ஓய்வுபெற்ற இஸ்ரோ முதன்மை விஞ்ஞானி டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் மன்னார்குடி மாணவர் களுக்கு பரிசு வழங்கினர்.
இந்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்த மன்னார்குடி தனியார் பள்ளி மாணவர்கள் ஜெயப்பிரியா, வெண்ணிலா, வசந்தராதேவி, பிரீத்தி, குருபிரசாத் ஆகியோர், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
‘‘இந்தப் போட்டி குறித்து பள்ளி யில் அறிவிக்கப்பட்டபோது, பூமிக்கு நன்மை செய்யக்கூடிய காரணிகளை விண்வெளிக்கு அனுப்பி அதன்மூலம் நன்மையைப் பெறும் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்தோம். அதன் அடிப்படையில், புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான புறஊதாக் கதிர்களைக் குறைப்பதற் கான பாக்டீரியா என்னவென்று ‘பிக் டேட்டா’ முறையில் தேடிய போது கிடைத்ததுதான் டெய்னோ காக்கஸ் ரேடியோ டூரான்ஸ் (Deinococcus radiodurans) என்ற பாக்டீரியா.
இது மிகக்குறைந்த வெப்ப நிலையிலும் வளரும் தன்மை கொண்டது. இதனை, கியூப்சாட் வழியாக வளிமண்டலத்தில் நிலை நிறுத்தி வளரச்செய்யும்போது, இப்பாக்டீரியா உள்ள பகுதிகளுக்கு கீழ் உள்ள நாடுகளில் மட்டும் சூரியனில் இருந்து வரும் புற ஊதா மற்றும் அகச்சிவப்பு கதிர்களின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்பதை விளக்கும் விதமாக ஆய்வுக்கட்டுரை சமர்ப் பித்ததுடன், இதுகுறித்து ‘பவர் பாயின்ட் பிரசன்டேஷன்’ மூலம் விளக்கமளித்தோம்.
உருளைக்கிழங்கை கொதிக்க வைத்து, அகர்அகர் என்ற கடற் பாசியைக் கலந்து உலர்த்தும்போது டெய்னோ காக்கஸ் ரேடியோ டூரான்ஸ் என்ற பாக்டீரியா தானாக வளர்ந்துவிடும். அதனை உரிய தட்பவெப்ப நிலையில் பிரத்யேக பெட்டியில் அடைத்து கியூப்சாட் மூலம் அனுப்பி வைக்கலாம்’’ என்றனர்.
வழிகாட்டி ஆசிரியர் டாக்டர் எஸ்.சேதுராமன் கூறியபோது, “எங்கள் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளதன் மூலம், எதிர்காலத்தில் செயற்கைக்கோள் தயாரிப்பில் பங்களிப்பைச் செய்ய வுள்ளனர் என்பது எங்கள் பள்ளிக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வளர்ச்சிக்கும் கிடைத்த வெற்றி” என்றார்.
அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கூறிய போது, “தொலைநோக்குடன் இந் தப்போட்டியை நடத்தி மாணவர் களைத் தேர்வு செய்துள்ளோம். இம்மாணவர்களை விஞ்ஞானிகள், செயற்கைக்கோள் தயாரிப்பு வல்லுநர்களுடனும், தொடர்புடைய தொழிற்கூடங்களிலும் பணியாற்ற வைத்து, அவர்களின் அறிவாற் றலை மேம்படுத்தவுள்ளோம். மாணவர்களின் பங்களிப்புடன் ஓரிரு ஆண்டுகளில் விண்வெளிக்குச் செயற்கைக்கோள் செல்லவிருப் பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
செயற்கைக்கோள் தயாரிப்பில் மாணவர்கள் பங்களிப்பு என்ற போட்டியில் வெற்றி பெற்ற மன்னார்குடி தனியார் பள்ளி மாணவர்களுக்கு, சென்னையில் நடைபெற்ற விழாவில் பரிசளிக்கும் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை விஞ்ஞானிகள், செயற்கைக்கோள் தயாரிப்பு வல்லுநர்களுடனும், தொடர்புடைய தொழிற்கூடங்களிலும் பணியாற்ற வைத்து, அவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தவுள்ளோம். மாணவர்களின் பங்களிப்புடன் ஓரிரு ஆண்டுகளில் விண்வெளிக்குச் செயற்கைக்கோள் செல்லவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT