Published : 09 May 2017 09:45 AM
Last Updated : 09 May 2017 09:45 AM
மழை இல்லாததாலும், நீர்நிலைகள் வறண்டதாலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவை சந்தித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை போதிய அளவு பெய்யத் தவறியதாலும், காவிரி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து இல்லாததாலும் ஏரி, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின் றன. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குடிநீர் கேட்டு சாலை மறியல், முற் றுகைப் போராட்டங்களில் பொது மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை சமாளிக்க தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, குடிநீர் ஆதாரங்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எனினும் மழையின்மை, வறட்சி, கோடை வெப்பம் காரண மாக மாநிலம் முழுவதும் நிலத் தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துகொண்டே வருகிறது.
தமிழக அரசின் நீர்வளத் துறை புள்ளி விவரப்படி, நடப்பாண்டில் முதல் 4 மாதங்களின் நீர்மட்டம், கடந்த 2016-ம் ஆண்டில் இதே மாதங்களில் பதிவான நீர்மட்டத்தைவிட, அனைத்து மாவட்டங்களிலும் கடும் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாத ஆய்வின்படி, கோவையில் 17.5 மீ, நாமக்கல்லில் 15.82 மீ, சேலத்தில் 14.61 மீ, திருப்பூரில் 14.53 மீ, தேனியில் 14.07 மீ, ஈரோட்டில் 13.30 மீ, திண்டுக்கல்லில் 13.24 மீ, திருச்சியில் 11.65 மீ, பெரம்பலூரில் 11.47 மீ, தர்மபுரியில் 11.39 மீ, விருதுநகரில் 10.88 மீ ஆழத்துக்கும் கீழ் நிலத்தடி நீர்மட்டம் சென்றுவிட்டது.
அதேபோல, கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 5.02 மீட்டர் சரிவை சந்தித்துள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், தர்மபுரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் தலா 4 மீட்டர் சரிவு ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் கணிச மான அளவுக்கு நீர்மட்டம் சரிந்துள் ளதால், ஆழ்துளைக் கிணறுகளும் முற்றிலுமாக வறண்டு போகக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “மழையின் அளவைப் பொறுத்து ஒவ்வொரு ஆண்டிலும் நீர்மட்டத்தில் மாதந்தோறும் மாறுபாடு ஏற்படும். சில சமயம் குறைந்திருக்கும், அடுத்தடுத்த மாதங்களில் உயரும். ஆனால், கடந்த 2016-ஐ ஒப்பிடுகையில், நடப்பாண்டில் இதுவரை தமிழகத் தின் எந்த மாவட்டத்திலும் சரா சரி நீர்மட்டம் ஒரு அடிகூட உயர வில்லை.
கடந்த 5 மாதங்களாக இதேநிலை நீடிக்கிறது. இம்மாத இறுதிக்குள் கோடை மழை பரவலாக பெய் யும் என எதிர்பார்க்கிறோம். ஒரு வேளை, அதுவும் பொய்த்துவிட் டால் தமிழகம் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்திக்க நேரிடும்.
நிலவியல் வல்லுநர்களின் உதவியுடன் பூமிக்கு கீழே நீரோட் டம் அதிகமுள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு கூடுதல் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக் கும் பணிகள் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குடிநீர் பிரச்சினையை ஓரள வுக்கு சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றனர்.
பூமிக்கு கீழே நீரோட்டம் அதிகமுள்ள பகுதிகளைக் கண்டறிந்து கூடுதல் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT