Last Updated : 15 Mar, 2017 01:02 PM

 

Published : 15 Mar 2017 01:02 PM
Last Updated : 15 Mar 2017 01:02 PM

டிடிவி.தினகரனை அதிமுக தொண்டர்களும் ஆர்.கே.நகர் மக்களும் ஏற்க மாட்டார்கள்: தமிழிசை

அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.கே.நகர் வேட்பாளர் டிடிவி.தினகரனை அதிமுக தொண்டர்களும் ஆர்.கே.நகர் மக்களும் ஏற்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவந்த தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.கே.நகர் வேட்பாளர் டிடிவி.தினகரனை அதிமுக தொண்டர்களும் ஆர்.கே.நகர் மக்களும் ஏற்க மாட்டார்கள்.

திமுக தவிர எந்த கட்சியின் ஆதரவையும் ஏற்கத் தயார் என தினகரன் கூறியிருப்பது அவரது தார்மீக உரிமை. ஆனால், ஊழலற்ற கட்சியையே பாஜக ஆதரிக்கும்" என்றார்.

'தீவிரம் காட்டாத திமுக'

அவர் மேலும் கூறும்போது, "ஆர்.கே.நகரில் திமுக முன்னிறுத்தியிருக்கும் வேட்பாளரை வைத்துப் பார்க்கும்போது, திமுக இத்தேர்தலில் தீவிரம் காட்டவில்லையோ எனத் தோன்றுகிறது" என்றார். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக செயல்படாமல் வெளிநடப்புத் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்" என்றார்.

முடங்கிய நிர்வாகம்

"தமிழகத்தில் நிற்வாகம் முற்றிலும் முடங்கி உள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது, குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. தமிழகத்தின் இத்தனை பிரச்சினைக்கும் காரணம் திமுக, அதிமுக தான்" என்றும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x