Published : 03 Feb 2017 10:51 AM
Last Updated : 03 Feb 2017 10:51 AM

மரங்கள் பற்றிய விழிப்புணர்வுக்காக சென்னையில் மாரத்தான் போட்டி

மரங்கள் வளர்ப்பு குறித்து இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னையில் மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது. சென்னை சூப்பர் ரன்னர்ஸ் என்கிற அமைப்பு இந்த போட்டியை நடத்துகிறது.

வர்தா புயலால் சென்னையில் பல மரங்கள் காணாமல் போயின. தொடர்ந்து மரங்களின் முக்கியத்துவம் குறித்தும், மரங்கள் வளர்ப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட அமைப்பு சென்னை சூப்பர் ரன்னர்ஸ். மர வளர்ப்பு, புற்றுநோய் விழிப்புணர்வு, விளையாட்டு போட்டிகள் ஆகியவற்று தொடர்ந்து ஆதரவு தந்து வரும் இந்த அமைப்பு, பிப்ரவரி 19-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சென்னை அடையாறில் உள்ள குமார ராணி மீனா முத்தையா கலைக் கல்லூரி மைதானத்தில் மாரத்தான் போட்டியை நடத்துகிறது.

நாட்டில் நிலவி வரும் பஞ்சத்தை போக்க மழை வேண்டும், மழை வேண்டுமென்றால் மரங்கள் வேண்டும். எனவே இளைய தலைமுறையினரிடயே இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த போட்டி நடத்தப்படுகிறது என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் துரை ராமச்சந்திரன் தெரிவித்தார்.

5 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஒரு குடும்பத்தில் எவ்வளவு பேர் வெண்டுமானலும் இந்த போட்டியில் பங்கேற்கலாம். வயதுக்கு ஏற்றாவாறு மாரத்தான் போட்டியின் தூரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்தப் பரிசுத்தொகை ரூ.50,000. இதில் சிறுவர்களுக்கு/ஆண்களுக்குத் தனியாகவும், சிறுமிகள் / பெண்களுக்குத் தனியாகவும் பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.2500, இரண்டாம் பரிசு ரூ.1500, மூன்றாம் பரிசு ரூ.1000.

இந்த போட்டியில் பங்கெடுக்க >www.marathonchennai.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x