Published : 02 Jun 2017 10:32 AM
Last Updated : 02 Jun 2017 10:32 AM
திருநெல்வேலி மாநகரில், விதிமீறி கட்டப்பட்டுள்ள 254 கட்டிடங்கள் மீது துறை அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
திருநெல்வேலி மாநகரில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங் களின் எண்ணிக்கை குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் பிரம்மா கேள்வி அனுப்பியபோது, திருநெல்வேலி யில் 254 விதிமீறல் கட்டிடங்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும், உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் பதில் அளித்திருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே இத்தக வல் பெறப்பட்டிருக்கிறது. ஆனால், சம்பந்தப்பட்ட கட்டிட உரிமை யாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
டவுன் ரதவீதியில் அதிகம்
திருநெல்வேலி மாநகரின் புராதன சின்னமாக அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை சுற்றி 1 கி.மீ. தூர சுற்றளவில் 9 மீட்டர் உயரத் துக்கு மேல் கட்டிடங்கள் கட்டக் கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால், இந்த விதிமுறையை மீறி ஏராளமான கட்டிடங்கள் அதிக உயரத்துக்கு கட்டப்பட்டிருக்கின் றன. இங்கு மட்டும் 103 கட்டிடங்கள் விதிமீறி கட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு 3 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், தொடர் நடவடிக்கை ஏதுமில்லை.
நீதிமன்றம் உத்தரவு
வழக்கறிஞர் பிரம்மா கூறும் போது, ``நெல்லையப்பர் கோயிலை சுற்றியுள்ள விதிமீறல் கட்டிடங் களை இடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகி றோம். இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநெல்வேலி மாநகரில் நடை பெறும் கட்டிடப் பணிகளை 15 நாட்களுக்கு ஒருமுறை கண்காணித்து, விதிமீறல்களை கண்டறிந்தால் உடனே பணிகளை நிறுத்த நோட் டீஸ் அளிக்கவும், கட்டுமான பொருட்களை பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அவ்வாறு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை” என்றார் அவர்.
திருநெல்வேலி வழக்கறிஞர் க.மகேஷ் கூறும்போது, ``திருநெல்வேலி டவுண், சந்திப்பு, வண்ணார் பேட்டை, பாளையங்கோட்டை, புதிய பேருந்து நிலையம் உட்பட முக்கிய பகுதிகளில் பிரபல ஓட்டல் கள், ஜவுளி நிறுவனங்கள், நகைக் கடைகள் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளன. பொதுப்பணித் துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, மின் வாரியம் மற்றும் உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் இத்தகைய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT