Last Updated : 26 Apr, 2017 07:46 AM

 

Published : 26 Apr 2017 07:46 AM
Last Updated : 26 Apr 2017 07:46 AM

ஓய்வு பெற்ற பாதுகாப்புத்துறை ஊழியர்களின் 9 ஆண்டுகால தொடர் கோரிக்கை: சென்னை ஆவடியில் புதிய சிகிச்சை மையம் - மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி

கடந்த 9 ஆண்டுகளாக விடுக்கப் பட்ட தொடர் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்ற மத்திய பாதுகாப்புத் துறை ஊழியர் களுக்காக புதிய சிகிச்சை மையம் கட்ட மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய அரசு பாதுகாப்பு நிறுவனங்களான எச்விஎப், ஓசிஎப், சிவிஆர்டிஇ, சிவிடி ஆகியவை உள்ளன. இங்கு பணியாற்றி வரும் மற்றும் ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சை மையம் சென்னையை அடுத்த ஆவடியில் தொடங்கப்பட்டது. இந்த மையம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

எந்நேரமும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இக்கட்டிடம் உள்ளதால் சொந்தக் கட்டிடம் கட்டித் தரக்கோரி பாதுகாப்புத் தொழிற்சாலைகள் மற்றும் அதன் இணை நிறுவனங்களின் ஓய்வு பெற்ற ஊழியர் நல சங்கம் சார்பில் கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய சிகிச்சை மையம் கட்ட மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து, பாதுகாப்புத் தொழிற்சாலைகள் மற்றும் அதன் இணை நிறுவனங்களின் ஓய்வுபெற்ற ஊழியர் நல சங்க பொதுச் செயலாளர் பி.கஜபதி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மத்திய அரசு பாதுகாப்புத் துறை நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2005-ம் ஆண்டு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட் டது. தொடக்கத்தில் 250 பயனாளி கள் இந்த மையத்தில் சிகிச்சை பெற்று வந்தனர்.

தற்போது 15 ஆயிரம் பயனாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒரு மருத் துவருடன் தொடங்கப்பட்ட இந்த சிகிச்சை மையத்தில் தற்போது 5 மருத்துவர்களும், 4 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உட்பட 14 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

4 ஆயிரம் சதுரஅடி இடம்

இந்த சிகிச்சை மையம் கட்ட தொடர் கோரிக்கை விடுத் ததையடுத்து எச்விஎப் தொழிற் சாலை நிர்வாகம் 4 ஆயிரம் சதுர அடி இடத்தை வழங்கியது. இந்த இடத்துக்கு ரூ.17.5 லட்சம் பிரீமியம் தொகையாகவும், ரூ.1.7 லட்சம் வருடாந்திர உரிமக் கட்டணமாக வும் வழங்க வேண்டும் என கோரியது. இதுதொடர்பாக, முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் தற்போதைய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா ஆகியோரிடம் இதற்கான தொகையை வழங்குமாறு எங்கள் சங்கம் சார்பில் தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழ், எச்விஎப் நிறுவனம் வழங்கிய நிலத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் 10 ஆண்டுகளுக்கு உரிமக் கட்டணம் வழங்க அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், கடந்த 9 ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது. விரைவில் சிகிச்சை மையம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு கஜபதி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x