Published : 25 Feb 2014 12:00 AM
Last Updated : 25 Feb 2014 12:00 AM

சிறிய பஸ்களால் இரவில் பாதுகாப்பான பயணம்- பெண் பயணிகள் பெரும் வரவேற்பு

சிறிய பஸ்கள் உதவிகரமாக இருப் பதாக வடசென்னை பயணிகள், குறிப்பாக பணிக்குப் போகும் பெண் கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரில் முக்கியமான சாலைகள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் 100 சிறிய பஸ்களை போக்குவரத்துத் துறை இயக்கத் தொடங்கியுள்ளது.

வடசென்னையில் மணலி, மாதவரம், பெரம்பூர், கொளத்தூர், அகரம், மூலக்கடை, அசிஸ்நகர், செங்குன்றம், காரனோடை போன்ற முக்கியமான இடங்களுக்கும் குறுகிய சாலைகள் வழியாக சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இரவு நேரங்களில் தங்களது வீட்டு வாசலிலேயே சென்று இறங்க முடிவதால், வடசென்னையின் உட் புறப்பகுதிகளில் வசிக்கும் பெண் களிடம் இந்த சிறிய பஸ்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இரவில் வீடு திரும்பும் பெண்கள் சிறிய பஸ்களில் பயணம் செய்வது பாதுகாப்பாக இருப்பதாக தெரி வித்துள்ளனர்.

கடந்த வாரம் வில்லிவாக்கம் பெரம்பூர் பகுதியில் அறிமுகப் படுத்தப்பட்ட சிறிய பஸ்களின் பயணிகள் `தி இந்து' நிருபரிடம் கூறியதாவது:

‘‘வழக்கமான பெரிய பஸ்களை விட இந்த சிறிய பஸ்கள் மிகவும் பயனுள்ளவை. ஆட்டோவுக்கு குறைந்தபட்சம் ரூ.30 வேண்டும். ஷேர் ஆட்டோவுக்கு ரூ.15 வேண் டும். சிறிய பஸ்களில் ரூ.9 செலவு செய்தாலே போதும் வீடு போய் சேர்ந்துவிடலாம்” என்கிறார் வில்லி வாக்கத்தை சேர்ந்த வி.ரகுநாதன்.

மு.தமிழ்பாண்டியன் (சீனிவாச நகர்):- ‘பெரம்பூரில் சிறிய பஸ்கள் வந்து செல்வது, இன்னும் பெரும் பாலான மக்களுக்கு தெரிய வில்லை. இது குறித்து ஒரு வாரத் திற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும். உட்புறச் சாலை களை சீரமைத்தால் பயணம் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்றார்.

வை.முரளிமோகன் (அம்பத் தூர்) கூறும்போது, ‘‘பெரிய பஸ்கள் செல்லாத இடத்தில், சிறிய பஸ்கள் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் பகுதிக்கு அடிக்கடி பஸ் செல்கிறது. இதனால், எந்த பிரச் சினையும் இல்லாமல் செல் கிறோம்’ என்றார்.

ரீட்டா மனோகரன் (டெலிபோன் காலனி) கூறுகையில், ‘‘முன்பு சிறிய பஸ்கள் பெரும்பாலும் தென் சென்னை பகுதிகளில் இயக்கப்பட் டன. இப்போது வடசென்னையில் முக்கிய வழித்தடங்களிலும் சிறிய பஸ்கள் வலம் வருவது மகிழ்ச்சி யாக இருக்கிறது'’ என்றார்.

அசிஸ்நகர் பெரம்பூர் வழியாக செல்லும் சிறிய பஸ் (எஸ்64) பயணி களின் கருத்துக்கள் பின்வருமாறு:

எஸ்.ஜெயா மற்றும் வே.சங்கரா :- கடந்த 2 நாட்களாக இந்த சிறிய பஸ்சில் தான் பயணம் செய் கிறோம். நன்றாக இருக்கிறது. கூட்ட நெரிசலும் குறைவாக இருக் கிறது. அடிக்கடி எங்கள் வீடு அருகே பஸ் வந்து செல்வதால், நீண்ட தூரத் திற்கு நடந்து செல்ல வேண்டிய தேவையும் இல்லை. இரவில் பாது காப்பாக வீட்டிற்கு வந்து சேரு கிறோம். பள்ளி செல்லும் எங்கள் குழந்தைகளும் பாதுகாப்பாக வீடு வந்து சேருகின்றனர்’’ என்றனர்.

ஏ.ரத்னா அஜிதாதாஸ் (அருள் நகர்) கூறும்போது, ‘‘சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல் லோருக்கும் எளிமையாக பஸ் வசதி கிடைக்கிறது.

முக்கியமான சாலைகளிலும் பெரிய, பெரிய பஸ்கள் செல்லும் இடங்களிலும் அவற்றின் எண் ணிக்கையை குறைத்து, அதிக அளவில் சிறிய பஸ்களை இயக் கினால், போக்குவரத்து நெரி சலும் குறையும் அல்லவா?’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x