Published : 23 Sep 2016 08:54 AM
Last Updated : 23 Sep 2016 08:54 AM

உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு நேர்காணல் மூலம் மேயர்கள் தேர்வு: சசிகலா புஷ்பா விவகாரத்தை தொடர்ந்து ஜெயலலிதா புது முடிவு

சசிகலா புஷ்பா எம்பி விவகாரத் தைத் தொடர்ந்து கட்சித் தலை மைக்கு விசுவாசம் இல்லாதவர் கள் மேயராவதைத் தடுக்க அதிமுக தலைமை புதிய முறையை பின்பற்ற உள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்குப்பின் மாநகராட்சி மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுபவர்களிடம் நேர் காணல் நடத்தி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்ந் தெடுக்க உள்ளார் என அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இம்முறை போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சித் தலைவர்கள், மாநகராட்சி மேயர், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளை ஒட்டுமொத்தமாக கைப்பற்ற அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் அனுப்பும் பரிந் துரை பட்டியலில் இறுதி வேட்பா ளரை கட்சித் தலைமையே முடிவு செய்யும் என கூறப்படுகிறது.

அந்த பட்டியலில் தலைமை மீது விசுவாசம் இல்லாதவர்கள், பதவி ஆசையில் மாற்றுக் கட்சி யில் இருந்து வந்தவர்கள், குற்றப் பின்னணி உள்ளவர்கள், எதிர்க்கட்சியினருடன் ரகசிய உறவு வைத்திருப்போர் இடம்பெற்றிருந் தால், அவர்களை நீக்குவதற்கு கட் சித் தலைமை முடிவு செய்துள் ளது.

இதற்கு முன்பு மேயர் வேட் பாளரை மாவட்டச் செயலாளர் களே பரிந்துரை செய்யும் வழக் கம் இருந்தது. தற்போது மேயர் வேட்பாளரை கட்சித் தலைமையே அடையாளம் கண்டு அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

இந்த உள்ளாட்சித் தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் போட்டி வேட்பாளராக களம் இறங்காதபடி, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வேட்பாளரை தேர்வு செய்யுமாறு மாவட்டச் செயலாளர் களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தி உள்ளது.

கடந்த காலங்களில் ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, மாவட்ட பஞ் சாயத்துத் தலைவர், மேயர் பதவிக்கு போட்டியிடக்கூடியவர் களின் பெயர்களை அந்தந்த மாவட்டச் செயலாளர்களே கட்சித் தலைமைக்கு பரிந்துரைத்தார்கள். ஒரு சில மாற்றத்தை தவிர, பெரும் பாலும் அவை ஏற்கப்பட்டுவிடும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வரும் சிலர், தவறு செய்து கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தினர். அவர்கள் மீது கட் சித் தலைமை நடவடிக்கை எடுத்தபோது, குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிவிட்டு மாற்றுக் கட்சி களுக்கு சென்றனர்.

குறிப்பாக, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மேயராக்கப்பட்டு அதன் பிறகு மாநிலங்களவை உறுப்பின ராக்கப்பட்ட சசிகலா புஷ்பா, சமீபத்தில் கட்சித் தலைமைக்கு எதிராக பேசி அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். அவரது பின்னணி தெரியாமல், அவரை உயர் பதவிக்கு பரிந்துரை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுபவர்களை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவே முடிவு செய்து அவர்களுக்கு நேர்காணல் நடத்தி அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x