Last Updated : 26 Feb, 2017 10:01 AM

 

Published : 26 Feb 2017 10:01 AM
Last Updated : 26 Feb 2017 10:01 AM

‘கல்சா மகால்’ தரைத்தளம் பழமை மாறாமல் புதுப்பிப்பு: பசுமைத் தீர்ப்பாயம் விரைவில் செயல்படும் என தகவல்

தீ விபத்தில் பெரும் சேதமடைந்த “கல்சா மகால்” தரைத்தளம் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. 24 ஆயிரம் சதுர அடியில் 30 அறைகள் கொண்ட இத்தளத்தில் விரைவில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் செயல்படும் என்று தெரிகிறது.

சேப்பாக்கம் பேலஸின் ஒரு பகுதியான “கல்சா மகால்” 1768-ல் இந்தோ-சார்சனிக் கட்டிடக் கலையில் கட்டப்பட்டது. இந்திய கட்டுமானப் பொருட்களைக் கொண்டு முகாலய கட்டிடக் கலை யில் கட்டப்பட்டதே இந்தோ- சார்சனிக் கட்டிடக் கலை என்று அழைக்கப்படுகிறது. 30 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள மிகவும் பழமையான இப் பாரம் பரியக் கட்டிடத்தில் தமிழக அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையும், சமூக நலத்துறையும் செயல்பட்டன.

2012-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கல்சா மகாலின் சுற்றுச் சுவர் தவிர கட்டிடத்தின் மேற்கூரை கள் உள்ளிட்ட பகுதிகள் அனைத் தும் சேதமடைந்தன. பழைய பொலிவு மாறாமல் இக்கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் வலியுறுத்தப் பட்டது. இதையடுத்து கல்சா மகாலைப் புதுப்பிக்க ரூ.14 கோடியே 50 லட்சத்தை அரசு ஒதுக்கியது.

கல்சா மகாலைப் புதுப்பிக்க விருதுநகர் மாவட்டம் ராஜபாளை யம், நெல்லை மாவட்டம் செங் கோட்டையில் இருந்து சுண்ணாம்பு பவுடரும், தேக்கு மற்றும் ஷால் மரங்களும் வரவழைக்கப்பட்டன. அனுபவம் வாய்ந்த கட்டுமானப் பணியாளர்கள், ஸ்தபதிகளைக் கொண்டு 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதுப்பிக்கும் பணி தொடங் கியது.

கல்சா மகாலின் முகப்புப் பகுதியை பழமை மாறாமல் ஸ்தபதி கள் வடிவமைத்தனர். இரும்பு உத்திரங்கள், மரத்தாலான உத்திரங் கள், ஒன்றரை அடி இடைவெளி யில் குறுக்குச் சட்டங்களு டன் மேற்கூரைகள் அமைக்கப் பட்டுள்ளன. தேக்கு மரத்தில் செய்யப்பட்ட கதவுகள், ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. 24 ஆயிரம் சதுர அடியில் 30 அறைகளுடன் தரைத்தளம் பயன்பாட்டுக்குத் தயாராகி விட்டது.

இத்தளத்தில் குறைந்தபட்சம் 10 அடி நீளம், 15 அடி அகலம் கொண்ட சிறிய அறைகளும், அதிகபட்சம் 45 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட பெரிய அறைகளும் உள்ளன. தரைத்தளத்தின் நுழைவு பகுதியில் மழைநீர் உட்புகும் வகையில் எழிலுடன் புல்தரை அமைக்கப்பட்டுள்ளது.

தரைத் தளம் முழுவதையும், தற்போது அரும்பாக்கத்தில் செயல் படும் தென்மண்டல பசுமைத் தீர்ப் பாயத்துக்கு வழங்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதையடுத்து பயன்பாட்டுக்குத் தயாராகவுள்ள கல்சா மகாலின் தரைத்தளத்தை பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் பி.ஜோதிமணி அண் மையில் பார்வையிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறு கையில், “கல்சா மகாலைப் புதுப்பிக்கும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. இதுவரை 95 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. இறுதிக்கட்ட பணிகள் மட்டுமே உள்ளன. இதுவரை ரூ.14 கோடியே 50 லட்சம் செலவாகியுள்ளது. மேலும் சில கோடி ரூபாய் ஒதுக்கும்படி அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தரைத்தளம் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. முதல் தளத்தில் கலசங்களும், மாடங்களும் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இரு மாதங்களில் மொத்த பணிகளும் முடிவடைந்துவிடும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x