Last Updated : 17 Jun, 2016 01:01 PM

 

Published : 17 Jun 2016 01:01 PM
Last Updated : 17 Jun 2016 01:01 PM

தி இந்து செய்தி எதிரொலியால் கல்லூரியில் சேர தேயிலை தோட்ட தொழிலாளி மகளுக்கு குவிந்தது நிதியுதவி

பிளஸ் 2 தேர்வில் 1,129 மதிப் பெண் பெற்று மேற்படிப்பு படிக்க வசதியில்லாமல், தவித்த மூணாறு தேயிலை தோட்ட தொழிலாளி மகளுக்கு ‘தி இந்து’ செய்தி எதி ரொலியால் நிதி உதவி குவிந்தது. இதையடுத்து அவர் கல்லூரியில் சேர்ந்து படிப்பை தொடர்கிறார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருபவர் தனுஷ்ராணி. இவரது மகள் வி.சினேகா (17). இவர் தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே கன்னிசேர்வைபட்டியில் காந்திஜி வித்யாபீடம் மேல்நிலைப் பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர் வில் 1,129 மதிப்பெண் பெற்றார்.

தந்தை இல்லாததாலும், தாயார் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க முடியாமல் தவித்து வந்தார். இது குறித்த செய்தி கடந்த 2-ம்தேதி ‘தி இந்து’ நாளிதழில் வெளியானது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சினேகாவின் பள்ளித் தலைமை ஆசிரியர் கே.சுப்புராஜ் செல்போனில் தொடர்பு கொண்டு நிதியுதவி செய்யத் தொடங்கினர். இதையடுத்து சினேகா மதுரை பாத்திமா கல்லூரியில் சேர்ந்தார்.

இது குறித்து மாணவி சினேகா ‘தி இந்து’விடம் கூறியதாவது:

எனது நிலையை ‘தி இந்து’ செய்தியாக வெளியிட்டது. இதை யடுத்து ஏராளமான வாசகர்கள் நிதியுதவி செய்து வருகின்றனர். எனது வங்கிக் கணக்கில் இதுவரை ரூ.1.68 லட்சம் சேர்ந்துள்ளது. மதுரை யைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத வாசகர் ஒருவர் மூலம் நான் விரும்பிய பி.காம்.சிஏ படிக்க பாத்திமா கல்லூரியில் அட்மிஷன் கிடைத்துள்ளது. அந்த வாசகரே 3 ஆண்டுகள் கல்லூரி படிப்பு செலவு, விடுதி கட்டணம் முழுவதும் ஏற்றுக்கொண்டார்.

கல்லூரி படிப்பு முடிந்த பின் வங்கியில் உள்ள ரூ1.68 லட்சத்தை எடுத்து மற்ற மேற்படிப்பு படிக்க பயன்படுத்திக்கொள்வேன். நான் படித்து முடித்து வேலைக்குச் சென்ற பிறகு என்னைப்போல் கஷ்டப்படும் ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு கண்டிப்பாக உதவி செய்வேன். கல்லூரி படிப் புக்கு உதவிய ‘தி இந்து’ வாசகர் களுக்கும் எனது நன்றி என்றார்.

பள்ளித் தலைமை ஆசிரியர் கே.சுப்புராஜ், வகுப்பாசிரியர் எஸ்.குமரன் ஆகியோர் கூறியதாவது:

‘தி இந்து’வில் செய்தி வெளியா னதும். தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் கர்நாடகா மற்றும் அமெரிக்கா, லண்டன், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பல வாசகர்கள் தொடர்பு கொண்டு உதவி செய்ய முன்வந்தனர். எங்களிடம் மாணவி சினேகா வங்கி கணக்கு எண் கேட்டனர். நாங்கள் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் வங்கி கணக்கு எண்ணை அனுப்பி வைத்தோம். குறைந்த நாளிலேயே ரூ.1.68 லட்சம் நிதியுதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக ‘தி இந்து’வுக்கும், பெயர் வெளியிட விரும்பாத வாசகருக்கும் நன்றி என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x