Published : 09 Jul 2016 09:07 AM
Last Updated : 09 Jul 2016 09:07 AM
திருப்பூர் மத்திய காவல்நிலை யத்தில், மொஷிருதினின் மனைவி ஷாகிரா மற்றும் சகோதரர் மினாஜூதின் மியா ஆகியோரிடம் மேற்கு வங்க போலீஸ், விசாரணை நடத்திய நிலையில், ‘தி இந்து’விடம் ஷாகிரா நேற்று கூறியதாவது:
எனது சொந்த ஊர் மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டம் லாபூர். 8-ம் வகுப்பு வரை படித்தேன். பள்ளி யில் படிக்கும்போது மொஷிருதின் (எ) முஷாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர், கல்லூரி முதலாம் ஆண்டு மட்டும் படித்தார். நாங்கள் காதல் திருமணம் செய்துகொண்டோம். திருமணத்துக்குப் பின், என் பெற்றோர் தரப்பில் யாரும் என்னுடன் பேசுவதில்லை.
பிழைப்பு தேடி
அவரது அண்ணன் மினாஜூதின் மியா, திருப்பூர் மங்கலத்தில் வசித்து வந்தார். தம்பி அசதுல்லா மியாவும் இங்கு உள்ள மாட்டுக் கொட்டகையில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், பிழைக்க வழிதேடி, 2010-ம் ஆண்டு திருப்பூருக்கு வந்தோம். கோழிப்பண்ணை பகுதியில் மளிகைக் கடை நடத்தினோம்.
எங்களுக்கு திருப்பூர் செட்டிபாளையம் அரசு தலைமை மருத்து வமனையில்தான் 2 குழந்தைகளும் பிறந்தன. மிகவும் எளிய வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தோம். 7 ஆண்டுகளில் ஒருமுறை கூட, அவர் மீது எனக்கு ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்ததில்லை. இதைத் தான் போலீஸாரிடமும் வாக்கு மூலமாகத் தந்துள்ளேன்.
மளிகைக் கடை நடத்தி அமைதி யாக வாழ்ந்து கொண்டிருந்தோம். 2 பெண் குழந்தைகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார் மொஷிருதின். நாள் முழுவதும், நேரம் பார்க்காமல் மளிகைத் தொழிலுக்காக கடினமாக உழைத்தார். ஜாதிச் சான்றிதழ் வாங்குவதற்காக மேற்கு வங்கம் சென்றார். அவரை போலீஸார் கைது செய்ததாக செய்தியில் பார்த்துதான் அங்கிருந்து சொன் னார்கள். அதன்பின் தான் எங்க ளுக்கு தகவல் தெரிந்தது. கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.
பாதுகாப்புக்காக
நான் தனியாக இருப்பதால், பாதுகாப்புக்காக வீட்டில் கத்தி வைத்திருந்தார். அவரிடம் துப்பாக்கி எதுவும் இல்லை. இந்தப் பகுதியில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்கள், தங்களது குடும்பத்துக்கு பணம் அனுப்புவதற்காக, பணப் பரிவர்த்தனை செய்ய மடிக்கணினி வாங்கி வைத்தார்.
இனி ஊருக்குச் சென்றால் தான் உங்களுக்குப் பாதுகாப்பு என போலீஸார் தெரிவித்த தால், குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்ல உள்ளேன். என் கணவர் தவறு செய்திருக்க வாய்ப்பே இல்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT