Published : 05 Sep 2016 02:36 PM
Last Updated : 05 Sep 2016 02:36 PM
திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. மீன்பிடி ஏலப் போட்டி காரணமாக சரவணப் பொய்கையில் விஷம் கலக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிப் பதால், சரவணப் பொய்கை நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் முதற் படை வீடு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்குள்ள சரவணப் பொய்கை யானது, தெய்வீகப் புலவர் நக்கீரர் தவம் செய்த சிறப்பு கொண்டது. இப்பொய்கையில் தான் முருகப் பெருமான் குழந்தையாகத் தோன்றி யதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இப்பொய்கையில் இருந்து தான் முருகனின் வேலுக்கு அபிஷேகம் செய்ய தினமும் காலையில் புனித நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. கந்தசஷ்டி, தீர்த்த உற்சவத்தின்போது தெய்வா னையுடன் முருகப் பெருமான் சரவ ணப் பொய்கையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார் பதினைந்து ஏக்கரில் அமைந் துள்ள சரவணப் பொய்கையில் ஏராளமான மீன்கள் உள்ளன. இதனால் சரவணப் பொய்கை சுத்தமாக இருந்தது. இங்கு கோயில் சார்பில் ஜூன் மாதம் மீன் பிடி ஏலம் விடப்பட்டது. இதையடுத்து ஏலம் எடுத்தவர் பல ஆயிரம் மீன் குஞ்சுகளை பொய்கையில் விட்டு வளர்த்து வந்தார். இந் நிலையில், சரவணப் பொய்கையில் ஆயிரக்கணக்கான மீன்கள் நேற்று காலை இறந்து மிதந்தன. இதைப் பார்த்த பக்தர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்தனர். கோயில் ஊழியர்கள் இறந்து கிடந்த மீன்களை அப்புறப் படுத்தி சரவணப் பொய்கையை சுத்தப்படுத்தினர்.
இது தொடர்பாக கோயில் துணை ஆணையர் செல்லத்துரை கூறியதாவது:
சரவணப் பொய்கையில் மீன்கள் இறந்து மிதந்த நிலையில், குளத்தில் இருந்து தண்ணீர் மாதிரி சேகரித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தான் சரவணப் பொய்கையில் விஷம் கலக்கப்பட்டதா? அல்லது சோப்பு படிமங்களால் மீன் இறந் ததா? என்பது தெரிய வரும். இது தொடர்பாக மீன்வளத் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளோம் என்றார்.
திருப்பரங்குன்றம் நகர இந்திய கம்யூனிஸ்ட் செயலர் பி.மகாமுனி கூறியதாவது:
சரவணப் பொய்கையில் மீன் பிடிக்க ஏலம் விடக்கூடாது என தொடர்ந்து போராடி வருகிறோம். இங்கு இதுவரை மீன்கள் இறந்தது கிடையாது. இப்போது முதல் முறையாக மீன்கள் இறந்துள்ளன. சரவணப் பொய்கையில் மக்கள் குளிப்பதாலோ, துணிகளை துவைப்பதாலோ மீன்கள் சாகவில்லை. ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். மீன்பிடி ஏலத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.
மீன்பிடி ஏலம் எடுப்பதில் போட்டி காரணமாக பொய்கை நீரில் விஷம் கலக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT