Published : 30 Dec 2013 08:06 AM
Last Updated : 30 Dec 2013 08:06 AM

பிப். 24 முதல் பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்

சென்னை எழும்பூர் செங்கோட்டை (எண்: 12661) பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு 8.10 மணிக்குப் பதிலாக இரவு 8.50 மணிக்குப் புறப்படும். செங்கோட்டைக்கு மறுநாள் காலை 8.20 மணிக்குப் பதிலாக காலை 9 மணிக்கு சென்றடையும்.



மறுமார்க்கத்தில், செங்கோட்டை சென்னை எழும்பூர் (எண்: 12662) பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், செங்கோட்டையில் இருந்து தினமும் இரவு 7 மணிக்குப் பதிலாக மாலை 6.30 மணிக்குப் புறப்படும். சென்னைக்கு மறுநாள் காலை 7.05 மணிக்கு வருவதற்குப் பதிலாக காலை 6.40 மணிக்கு வந்துசேரும்.

சென்னை எழும்பூர் திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் (எண்: 12631) சென்னையில் இருந்து தினமும் இரவு 8.50 மணிக்குப் பதிலாக இரவு 8.10 மணிக்குப் புறப்படும். திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 8.35 மணிக்குப் பதிலாக காலை 8 மணிக்கு போய்ச்சேரும்.

திருநெல்வேலி சென்னை எழும்பூர் நெல்லை எக்ஸ்பிரஸ் (எண்:12632) நெல்லையில் இருந்து மாலை 6.50 மணிக்குப் பதிலாக இரவு 7.25 மணிக்குப் புறப்படும். சென்னைக்கு மறுநாள் காலை 6.40 மணிக்கு வருவதற்குப் பதிலாக காலை 7.10 மணிக்கு வந்துசேரும். இந்த நேர மாற்றம் வரும் பிப்ரவரி மாதம் 24-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x