Published : 04 Jan 2016 08:23 AM
Last Updated : 04 Jan 2016 08:23 AM
*
சட்டப்பேரவை தேர்தல் பணியை வழக்கறிஞர்கள் முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றினால் அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என அக்கட்சியின் வழக்கறிஞர் அணி மாநிலத் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் பணி குறித்து திமுக வழக்கறிஞர் அணியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் வரும் ஜன. 24-ம் தேதி நடைபெற வுள்ளது. இதற்காக திமுகவில் அமைப்பு ரீதியாக 18 தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகி கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மதுரையில் நடைபெற்றது.
மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர், துணை அமைப் பாளர்கள் என 300 பேர் பங்கேற்றனர். திமுக மாவட்டச் செயலர்கள் பி.மூர்த்தி, வி.வேலுச்சாமி, கோ.தளபதி, மணிமாறன், முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், முன் னாள் மேயர் பெ.குழந்தைவேலு உட்பட பலர் பங்கேற்றனர்.
வழக்கறிஞர் அணியின் மாநிலத் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் பேசியது: திமுக சோதனைகளை சந்தித்தபோதெல்லாம் மீண்டுவர வழக்கறிஞர்கள் அளப்பரிய பணியை ஆற்றியுள்ளனர். இதை கட்சி நன்றாக உணர்ந்துள்ளதால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் வழக்கறிஞர்களுக்கு தேர்தல் பணியில் அதிக முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிட்டுள்ளது. மிகுந்த ஈடுபாட்டுடன் இப்பணியை நிறைவேற்றி, தேர்தல் வெற்றிக்கு உதவ வேண்டும். இது உங்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் என்றார்.
பின்னர் ‘தி இந்து’ செய்தியா ளரிடம் சண்முகசுந்தரம் கூறியது: திமுகவில் 5 ஆயிரம் வழக்கறிஞர் கள் நிர்வாகிகளாக உள்ளனர். தேர்தல் பணி பெரும் சவாலாக இருப்பதால் வழக்கறிஞர்கள் கண்காணிப்பு அவசியமாகிறது. போலி மற்றும் இறந்த வாக்காளர் சேர்க்கை என பல பிரச்சினைகளை வெளிக்கொண்டுவந்தது வழக் கறிஞர்களே.
தேர்தல் ஆணையம் நாளுக் கொரு விதியை அறிவிக்கிறது. இதை வழக்கறிஞர்கள் எளிதாக புரிந்துகொண்டு கட்சியினருக்கு வழிகாட்டுவர். வேட்புமனு தயாரிப்பு முதல் வாக்கு எண் ணிக்கை வரை ஒவ்வொரு பணிக்குழுவிலும் வழக்கறிஞர்கள் பிரதானமாக இடம்பெறுவர். ஒவ் வொரு சட்டப்பேரவை தொகுதிக் கும் குறைந்தது 30 வழக்கறிஞர்கள் தேர்தல் பணிக்குழுவில் இடம் பெறுவர். வரும் 24-ம் தேதி மதுரை யாதவா கல்லூரி அருகே இக்கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் பங்கேற்பர். அனைவரும் எளி தாக வந்து செல்லலாம் என்ப தால் மதுரையைத் தேர்வு செய் துள்ளோம்.
பயிற்சி வகுப்புபோல் நடைபெறும் இக்கூட்டத்தில் விழிப் புடன் எப்படி தேர்தல் பணியாற்ற வேண்டும் என கட்சியின் பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் பேசுவார். இக்கூட்டத்துக்கு முன்னதாக தொகுதி வாரியாக தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுவிடும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT