Published : 28 Jul 2016 10:06 AM
Last Updated : 28 Jul 2016 10:06 AM
தமிழக காவல்துறையில் 21 ஆயிரம் போலீஸார் பற்றாக்குறையால் கூடுதல் வேலைப்பளு மற்றும் மருத்துவச் செலவினங்களால் மன உளைச்சல் ஏற்பட்டு போலீ ஸார் அவதிப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
1 லட்சத்து 30 ஆயிரத்து 58 சதுர கி.மீ. பரப்பிலான தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, குற்றத் தடுப்புப் பணியில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது. அது மட்டுமல்லாது 1,076 கிலோ மீட்டர் நீள தமிழக கடலோரப் பகுதி களின் பாதுகாப்பையும் தமிழக காவல்துறை கவனித்து வருகிறது. வடக்கு, மத்தி, மேற்கு, தெற்கு என தமிழக காவல்துறை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் ஐஜி தலைமையில் இயங்கி வருகிறது.
தமிழக காவல்துறையில் 1 லட் சத்து 20 ஆயிரத்து 996 போலீ ஸார் பணிபுரிய வேண்டும். ஆனால், 99 ஆயிரத்து 896 போலீஸார் மட்டுமே தற்போது பணிபுரிகின்ற னர். இவர்களில், 2ம் நிலை, முதல் நிலைக்காவலர், தலைமைக் காவ லர்கள் மட்டும் 92,614 பேர் இருக்க வேண்டும். ஆனால், 77,750 பேர் மட் டுமே பணிபுரிகின்றனர் ஒட்டு மொத்தமாக 21,100 போலீஸார் பற்றாக்குறை உள்ளது. தற்போ தைய மக்கள்தொகைக்கு தகுந்த படி புதிய பணியிடங்கள் உருவாக் கப் படவில்லை. எல்லா காவல் நிலை யங்களிலும் போலீஸார் பற்றாக் குறையால் கடைநிலை போலீஸா ருக்கு கூடுதல் வேலைப் பளு ஏற்படுகிறது. குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டு பிடிப் பதில் தாமதம் ஏற்பட்டால் உயரதி காரிகளின் நெருக்கடிக்கும், நட வடிக்கைக்கும் ஆளாக வேண் டிய நிலை உள்ளதாக போலீஸார் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தரப் பில் கூறியதாவது: பிற மாநிலங்க ளில் சராசரியாக 500 பேருக்கு ஒரு காவலர் இருக்கும் நிலையில், தமிழகத்தில் சராசரியாக 800-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ஒரு காவலர் உள்ளார். பொதுவாக, எல்லா பண்டிகை நாட்களிலும் அரசு ஊழியர்கள் குடும்பத்தினருடன் இருப்பார்கள். ஆனால், போலீஸார் குடும்பத்தினருடன் இருக்க முடி யாது. அந்நாட்களில்தான், வேலைப் பளு மிக அதிகமாக இருப்பதால் ஊதியத்துடன் ஒவ்வொரு மாதமும் ‘ரிஸ்க் அலவன்ஸ்’ ரூ.1,000 கேட்டு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகி றோம். பண்டிகை, விடுமுறை நாட்களில் பணிபுரியும்போது ஊக் கத்தொகை வழங்க வலியுறுத்தி னோம். உள்ளாட்சி, சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல் பணிக்கு முதலில் வந்து, கடைசியாகச் செல்வது போலீஸார்தான். ஆனால், போலீஸாருக்கு ஒரு நாளுக்கு வெறும் ரூ.125 மட்டும் வழங்கு கின்றனர். மற்ற துறையினருடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு.
மாநகரங்களை தவிர, மாவட் டங்கள் மற்றும் பிற நகரங்களில் பணிபுரியும் ஒவ்வொரு போலீ ஸாரும் மாதத்தில் குறைந்தபட்சம் 25 நாட்கள் இரவுப் பணி பார்க்கின்றனர். இரவுப் பணிக்கு 8 மணிக்குச் சென்றால் அதிகாலை 5 மணிக்கே வீட்டுக்கு வர முடிகிறது. மீண்டும் காலை 10 மணிக்கு பணிக்கு செல்ல வேண்டும். அதனால், ஓய்வு பெறும்போது உடல்நிலை மோசமடைகிறது. ஆனால், மருத்துவச் செலவினங்கள் எதுவும் வழங்குவது கிடையாது என்றனர்.
எந்த ஆட்சி வந்தாலும்...
“காவல்துறை தவிர, மற்ற அரசு துறைகளில் பதவி உயர்வுகள் உடனுக்குடன் கிடைக்கிறது. ஆனால், போலீஸாருக்கு, முதல் பதவி உயர்வு கிடைக்கவே 10 ஆண்டுகள் ஆகின்றன. போலீஸாருக்கு சங்கங்கள் இல்லாததால், எங்கள் கோரிக்கைகளை எந்த அரசும் கண்டுகொள்வது இல்லை. போலீஸார் முழு நேரமும் காவல் நிலையத்திலேயே இருப்பதால் அவர்களின் குழந்தைகள் படிப்பு, பராமரிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எந்த ஆட்சி வந்தாலும் போலீஸார் எதிர்பார்க்கும் இந்த முக்கியக் கோரிக்கைகள் பற்றி யாரும் சிந்திப்பதில்லை” என்று போலீஸார் மேலும் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT