Last Updated : 14 Jun, 2017 08:52 AM

 

Published : 14 Jun 2017 08:52 AM
Last Updated : 14 Jun 2017 08:52 AM

மின்பற்றாக்குறையை சமாளிக்க 5000 மெகாவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிக்க திட்டம்

மின்பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 5000 மெகாவாட் சூரியஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய எரிசக்தித் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகி றது. கடந்த மாதம் ஒரு நாளின் மிக அதிகபட்ச மின்நுகர்வு 400 மில்லியன் யூனிட்டாக இருந்தது. எனவே, மின்பற்றாக்குறையை சமாளிக்கவும், மின்மிகை மாநில மாக தமிழகத்தை மாற்றவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய அனல் மின்நிலையத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, வரும் ஐந் தாண்டுகளில் 7 ஆயிரம் மெகாவாட் டுக்கும் கூடுதலாக மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு, பணிகள் நடைபெறுகின்றன. இதேபோல், சூரியசக்தி மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதன்படி, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 5000 மெகாவாட் மின்சாரம் உற் பத்தி செய்ய மின்வாரியம் திட்ட மிட்டுள்ளது.

இதுகுறித்து, எரிசக்தித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறிய தாவது:

வரும் 2025-ம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசுக் கட்டிடங்களில் சூரியசக்தி அமைப்புகள் பொருத் துதல், வீடுகளுக்கு மானியத்துடன் கூடிய மேற்கூரை சூரிய சக்தித் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

இதன்படி, தமிழக மின் வாரிய தலைமை அலுவலகம், ஆவின் பால் குளிர்பதனீட்டு மையங்கள், பிரபலமான 12 கோயில்கள் மற் றும் பல்வேறு உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் மற்றும் தெரு விளக்குகளுக்கு சூரியசக்தி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வ தற்கான பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இதன்படி, 5000 மெகா வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இதற்காக, வருவாய்த் துறை அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் உள் ளிட்ட பல்வேறு அரசு அலுவல கங்களில் சூரியசக்தி மின் கூரை அமைப்புகள் பொருத்தப்பட உள்ளன. அடுத்த 5 ஆண்டு களுக்குள் படிப்படியாக இந்த 5000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x