Published : 15 Oct 2013 01:37 PM
Last Updated : 15 Oct 2013 01:37 PM

சாலை விபத்துகள்: தமிழகத்தில் 11 ஆண்டுகளில் இறப்பு விகிதம் அதிகரிப்பு

தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 11 ஆண்டுகளில் 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2001-ஆம் ஆண்டில் 9, 571- ஆக இருந்த எண்ணிக்கை 2012-ஆம் ஆண்டில் 16, 175-ஆக அதிகரித்தது.

தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் புள்ளி விவரத்தின்படி, 2001- 2004- ஆம் ஆண்டுகளுக்கு இடையே சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9, 000 ஆகவும், 2005- ஆம் ஆண்டில் 13,961-ஆகவும் அதிகரித்தது.

2006-ஆம் ஆண்டு சற்று குறைந்திருந்தாலும், அதற்கு அடுத்த ஆண்டிலேயே மீண்டும் அதிகரித்து 12,036-ஆக ஆனது.

கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் மொத்தம் 16, 175 பேர் இறந்தனர். இவர்களில் இரு சக்கர வாகன விபத்தில் இறந்தவர்கள் 4, 466 ஆவர். அதற்கு அடுத்தப்படியாக, லாரி விபத்தில் இறந்தவர்கள் தான் அதிகம் என என். சி. ஆர். பி குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x