Published : 25 Jan 2014 10:20 AM
Last Updated : 25 Jan 2014 10:20 AM
சென்னையில் பொதுக் கழிப்பிடங்கள் தொடர்பாக ‘தி இந்து’வில் வெளியான செய்தியை மாநகராட்சிக் கூட்டத்தில் குறிப்பிட்டுப் பேசிய மேயர் சைதை துரைசாமி, ‘சென்னையில் தேவைக்கேற்ப பொதுக் கழிவறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்தார்.
சென்னையில் பொதுக் கழிப்பிடங்கள் போதிய அளவில் இல்லை என்பதை ‘தி இந்து’ செய்திகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன. திருவல்லிக்கேணி ஐந்துகுடிசை பகுதியில் 2 ஆயிரம் பேருக்கு 2 பொதுக் கழிப்பிடங்கள் மட்டுமே இருப்பதாக கடந்த 21-ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. சென்னையில் மக்கள்தொகைக்கு ஏற்ப பொதுக் கழிப்பிடங்கள் கட்டித்தர வலியுறுத்தி ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருவது பற்றி கடந்த 23-ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. வெள்ளிக்கிழமை நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி இதுபற்றி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
பணம் வசூலிக்கிறார்களா?
சென்னை மாநகராட்சியில் தற்போதுள்ள பொதுக் கழிப்பிடங்கள் அனைத்தும் மக்களின் பயன்பாட்டுக்காக இலவச கழிப்பிடங்களாகவே செயல்பட வேண்டும் என்று மண்டல அலுவலகங்களுக்கு ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கழிப்பிடங் களில் பணம் வசூலிப்பதாக அறிந்தால் அவர்கள் மீது காவல்துறையில் புகார் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மாநகராட்சியில் தற்போதுள்ள கழிப்பிடங்களில் அன்றாட பராமரிப்பை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்தனியாக ஒப்பங்கள் கோரப்பட உள்ளன.
அனைத்து மண்டலங்களிலும் நவீன கழிப்பிடங்கள் கட்டுதல், பராமரித்தல் முறையில் 2 முறை ஒப்பந்தங்கள் கோரப்பட்டன. அதற்கு போதிய வரவேற்பு இல்லாததால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
விரைவில் இலவச சேவை
அதற்கு மாற்றாக, நகராட்சி நிர்வாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘நம்ம டாய்லெட்’-ஐ சென்னை மாநகராட்சியே உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேவைக்கேற்ப கூடுதலாக, நவீன வசதிகளுடன் கூடிய பொதுக் கழிவறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சி பொதுக் கழிவறை
களை தனியார் மூலம் பராமரிக்கவும், அனைத்து பொதுக் கழிவறை களையும் கட்டணமின்றி இலவசமாக பொது
மக்கள் பயன்படுத்துவதற்கான நடவடிக் கைகளையும் எடுக்க உள்ளோம்.
இவ்வாறு மேயர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT