Published : 15 Mar 2014 12:00 AM
Last Updated : 15 Mar 2014 12:00 AM

தனித்துப் போட்டியிடுவது இறைவன் தந்த வரம்; அடுத்த வாரம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்- ஞானதேசிகன் பேட்டி

தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது இறைவன் தந்த வரம். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் 17-ம் தேதிக்கு பிறகு டெல்லியில் வெளியிடப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலை வர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரி வித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் வெள்ளிக் கிழமை நடந்தது. இதில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் நிருபர்களிடம் ஞானதேசிகன் கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித் தவர்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை மாநில தேர்தல் குழு பரிசீலித்து கட்சி மேலிடத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பட்டியலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான மத்திய தேர்தல் குழு, வரும் திங்கள்கிழமை (17-ம் தேதி) இறுதி செய்யும்.

அதன்பிறகு, தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சி மேலிடம் வெளியிடும். தமிழகத்தில் காங்கிரஸ் தனித்

துப் போட்டியிடுவது ஒன்றும் புதி தல்ல. தனித்துப் போட்டி யிடுவதை கட்சியினர் வரவேற்றுள்ளனர். இதை இறைவன் கொடுத்த வரமாகக் கருதுகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் மத்திய காங்கிரஸ் ஆட்சி செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிப்போம். தமிழகத்துக்கு மின்சாரம் வழங்குவதில் மத்திய அரசு பழிவாங்கும் நோக்கில் நடந்து கொள்ளவில்லை.

தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு ஆகியோர் கூறியிருக்கிறார்களே?

நானே தேர்தலில் போட்டியிட விரும்பினேன். இப்போதுஎம்.பி.யாக இருப்பவர்கள் விரும் பினால் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடலாம் என்று மத்திய தலைமை கூறியுள்ளது.

திண்டுக்கல் காங்கிரஸ் எம்.பி. அதே தொகுதியில் போட்டியிடலாம். அதில்தான் நான் போட்டியிட விரும்பினேன். இப்போது அது முடியாமல் போய்விட்டது. சிலர் போனால்தான் பிரச்சாரம் நன்றாக இருக்கும்.

பாஜக கூட்டணி பற்றி?

முரண்பட்ட கொள்கைகளின் கூடாரம். சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் கட்சிகளின் கூட்டமைப்பு. காங்கிரஸுடன் விஜயகாந்த் கூட் டணி அமைத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அரசியலைத் தாண்டி அவருக்கும் எங்களுக்கும் தனிப்பட்ட மரியாதை உண்டு.

மத்தியில் இருந்து காங்கிரஸை தூக்கியெறிய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறாரே?

தூக்கியெறிய காங்கிரஸ் ஒன்றும் பொருளல்ல. இது ஒரு பேரியக்கம். இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x