Published : 13 Jul 2016 08:04 AM
Last Updated : 13 Jul 2016 08:04 AM

நிழற்குடை இல்லாத உயர் நீதிமன்ற பஸ் நிலையம்: சீரமைக்க கோரி வழக்கு தொடர திட்டம்

சென்னை உயர் நீதிமன்ற பஸ் நிலையம் தற்போது எஸ்பிளனேடு பகுதியில் வடக்கு கோட்டை சாலையில் இயங்கி வருகிறது. ஆரம்ப நாட்களில் சகல வசதிகளுடன் செயல்பட்டு வந்த இந்த பஸ் நிலையம் தற்போது பெண் பயணிகள் அவசரத்துக்கு ஒதுங்க கழிப்பறை கூட இல்லாமல் உள்ளது.

மெட்ரோ ரயில் பணிகள் நடை பெற்று வருவதால் இந்த உயர் நீதிமன்ற பஸ் நிலையம், திருவிழா நேரங்களில் அமைக்கப்படும் தற் காலிக மைதானம் போல உள்ளது.

இங்கிருந்து கண்ணதாசன் நகர், கும்மிடிப்பூண்டி, எண்ணூர், மீஞ்சூர், காரனோடை, செங் குன்றம், தண்டலம், மூலக்கடை, புழல், வியாசர்பாடி, மாத்தூர், மாதவரம், காசிமேடு, தண்டையார் பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு அதி காலை 4.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பஸ் போக்குவரத்து உள்ளது.

ஆனால், இந்த பஸ் நிலை யத்தில் சுட்டெரிக்கும் வெயிலி லிருந்து தப்பிக்க நிழற்குடை கூட இல்லை. இதனால் உச்சி வெயில் நேரத்திலும் பயணிகள் மரங்களுக்கு கீழும், அருகில் உள்ள கடைகளிலும் தஞ்சம் புக வேண்டியுள்ளது. இதுவே மழை பெய்தால் பெண் பயணி கள், முதியவர்கள் அடையும் இன்ன லுக்கு அளவே இல்லை. மழையில் நனையாமல் இருக்க நிற்கும் பஸ்களுக்குள் ஏறி நிற்கின்ற னர். ஆரோக்கியமான பயணிகள் இந்த பஸ் நிலையத்துக்குள் ஒருமுறை வந்து சென்றால் போதும் சுவாசக் கோளாறு ஏற் பட்டுவிடும். அந்த அளவுக்கு தூசி மண்டலமாக காட்சியளிக்கிறது.

இந்த பஸ் நிலைய அவலம் குறித்து மதுராந்தகத்தை சேர்ந்த ஷங்கர் கூறும்போது, ‘‘புறநகரில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக வரும் பயணிகள் இந்த பஸ் நிலையத் துக்குத்தான் வர வேண்டியுள்ளது. ஆனால் இங்கு குடிநீர் கூட கிடைப்பதில்லை. பயணிகளும் பஸ்களோடு சேர்ந்து வெயிலில் காய வேண்டியுள்ளது’’ என்றார்.

மணலியைச் சேர்ந்த பயணி மும்தாஜ் கூறும்போது, ‘‘பெண்கள் அவசரத்துக்கு ஒதுங்க இந்த பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதி இல்லை. இந்த பகுதியில் தரமான ஓட்டல்களும் கிடையாது. எல்லாமே சாலையோர கடைகள்தான். இதனால் பெண் பயணிகள் பாடு திண்டாட்டமாக உள்ளது. ‘தென் சென்னை வாசி களுக்கு வெண்ணெய், வட சென்னை வாசிகளுக்கு சுண்ணாம்பு’ என்ற ரீதியில்தான் மாநகர போக்குவரத்துக்கழகம் செயல்படுகிறது. வடசென்னை பகுதிக்கு ஓட்டை, உடைசல் பஸ் கள்தான் இயக்கப்படுகின்றன. இதற்கு போக்குவரத்துக் கழகமும், துறை அமைச்சரும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்’’ என்றார்.

மாநகர அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் கூறும் போது, ‘‘பாரிமுனையில் பஸ்களால் நெருக்கடி ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் ஆரம்பம் முதலே இந்த பஸ் நிலையம் இங்கு இயங்கி வருகிறது. முன்பு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பஸ் நிலையமும் இங்குதான் செயல்பட்டது. கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட்ட பிறகு விரைவு பஸ்கள் அங்கு சென்று விட்டன. இங்கு ஓட்டுநர், நடத்து நர்களுக்கும் உட்கார இடம் கிடையாது. கழிப்பறை கிடை யாது. நாங்களும் உயரதிகாரிக ளிடம் பலமுறை முறையிட்டும் எந்த விமோசனமும் பிறக்கவில்லை. அருகில்தான் இந்த தொகுதி எம்எல்ஏ அலுவலகமும் உள்ளது’’ என்றனர்.

போக்குவரத்து அதிகாரிகளோ, ‘‘மெட்ரோ ரயில் பணி முடிந்த பிறகுதான் சீரமைப்புப் பணிகளை தொடங்க முடியும்’’ என்கின்றனர்.

அதற்காக பயணிகளின் அத்தி யாவசியத் தேவைகளைக் கூடவா நிறைவேற்ற முடியாது?. என குரல் கொடுக்கும் பொதுநல வழக்கறி ஞர்கள், இந்த உயர் நீதிமன்ற பஸ் நிலையம் சகல வசதிகளுடன் புதிய பரிமாணம் பெற வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x