Published : 30 Mar 2014 02:47 PM
Last Updated : 30 Mar 2014 02:47 PM
தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதாவின் ஆட்சி அல்ல, காணொளிக் காட்சி என திருப்பூரில் ஸ்டாலின் பேசினார்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ம.செந்தில்நாதனை ஆதரித்து சனிக்கிழமை மாநகரில் ஸ்டாலின் பேசியது:
திருப்பூரை மாவட்டமாக்கியது திமுக. 3 ஆண்டுகள் ஆகியும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்படவில்லை. கோவை, திருப்பூரில் ரூ.800 கோடி அளவிற்கு காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், வெளி மாநிலத்தில் அதிக விலைகொடுத்து தனியார் மின்சாரத்தை வாங்க ஜெயலலிதா முயற்சிக்கிறார். மின் பிரச்சினையில், பிரச்சினை தீர்க்கப்படும்...பற்றாக்குறை போக்கப்படும் என இன்னமும் பழைய பல்லவிதான் பாடிக்கொண்டிருக்கிறார்.
திமுக ஆட்சியில் மின்வெட்டு 2 மணிநேரம். ஜெயலலிதா ஆட்சியில் 24 மணிநேரமும் மின்வெட்டு இருக்கிறது.
ஜெயலலிதாவைப்போல் வாய்க்கு வந்ததைப் பேசவில்லை. தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடக்கவில்லை, காணொளிக்காட்சிதான் நடக்கிறது.
சேதுசமுத்திரத் திட்டத்தால் தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பல நன்மைகள் கிடைத்திருக்கும். திமுகவின் சாதனைகளை பட்டியல் போடலாம். ஆனால், அந்த தகுதி அதிமுகவுக்கு உண்டா? தமிழகத்தை தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் குடிநீரை விற்ற வரலாறு கிடையாது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT