Published : 31 Mar 2014 12:00 PM
Last Updated : 31 Mar 2014 12:00 PM
செல்போன் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களிலும் தமிழைப் பயன்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி, மக்கள் தொடர்புத் துறை செயலர் மூ.ராசாராம் வலியுறுத்தினார்.
கணினித் தமிழ் வளர்ச்சிப் பேரவையும் மாநிலக் கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து கணினித் தமிழ் வளர்ச்சி 2-வது மாநாட்டை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின. இதில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி, மக்கள் தொடர்புத் துறை செயலர் மூ.ராசாராம் தலைமை உரையாற்றினார். அவர் பேசிய தாவது: கணினித் தமிழ் வளர்ச்சிக்கு தமிழ் வளர்ச்சித் துறை ஏராளமான பணிகளைச் செய்து வருகிறது. யுனிகோடு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இணையதளங்கள், வலைப்
பூக்கள் வளர்ந்துள்ளன.ஜெர்மனி யில் இருக்கும் ஒருவர் இந்தியாவில் உள்ள ஒருவரிடம் ஜெர்மானிய மொழி யில் பேசினால், அந்தத் தகவல் இந்தியருக்கு ஆங்கில மொழியில் கேட்கும். அதுபோல ஜெர்மானிய மொழியில் பேசினால் அது ஆங்கில மொழியில் எழுத்தாக வருவதையும் காண முடிகிறது.மென்பொருள் நிறுவனங்கள், பல் கலைக்கழகங்கள், தமிழ் ஆர்வலர் ஆகியோரை அரசு பயன்படுத்திக் கொள்ளும். உலகத் தமிழ்ச் சங்கமும் இதற்கு துணை நிற்கும்.
இவ்வாறு ராசாராம் பேசினார்.
தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் தா.கி.ராமச்சந்திரன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கா.மு.சேகர், கணினித் தமிழ் வளர்ச்சிப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ந.தெய்வசுந்தரம், மைசூரில் உள்ள இந்திய மொழியியல் நிறுவன இந்திய மொழிகளுக்கான தரவுதள திட்ட இயக்குநர் ராமமூர்த்தி, மதுரை உலகத் தமிழ்ச்சங்க தனி அலுவலர் பசும்பொன், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி பதிப்பாசிரியர் மா.பூங்குன்றன், மாநிலக் கல்லூரி முதல்வர் முகமது இப்ராஹிம் உள்ளிட்டார் வாழ்த்திப் பேசினர். மாநிலக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் ப.மகாலிங்கம் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT