Published : 11 Aug 2016 08:33 AM
Last Updated : 11 Aug 2016 08:33 AM
பாதுகாப்பு அம்சங்களை மேம் படுத்த சரக்கு பெட்டிகளில் பாது காப்பு அறை அமைத்தல், சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் உள் ளிட்ட வசதிகள் கொண்டுவர ரயில்வே வாரியத்துக்கு ஐசிஎஃப் பரிந்துரை செய்ய முடிவு செய் துள்ளது.
சேலத்தில் இருந்து சென் னைக்கு ரயில் மூலம் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த ரூ.5.78 கோடியை ஓடும் ரயிலில் கூரையில் ஓட்டை போட்டு கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடுமுழுவதும் மொத்தம் 7 இடங்களில் ரயில்வேக்கு தேவை யான ரயில் பெட்டி, சரக்கு பெட்டி, இன்ஜின்கள் தயாரிக்கப்படு கின்றன. இதில், சென்னை பெரம் பூரில் உள்ள ஐசிஎஃப் (ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை) மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ஆர்சிஃஎப் (ரயில் பெட்டி தொழிற் சாலை) ஆகிய இரண்டு இடங்களில் பயணிகளுக்கான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
இதுவரையில் பயணிகளுக் கான ரயில் பெட்டிகளில் புதிய வசதிகள் கொண்டு வருவது, பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்து வது பற்றித்தான் ரயில்வேத் துறையில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, சேலம் விரைவு ரயிலில் சரக்குப் பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்துள்ள சம்பவத்தால் சரக்கு ரயில் பெட்டி கள் தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரம்பூரில் உள்ள ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் முதுநிலை வடிவமைப்பு பொறியாளர் எஸ்.சீனிவாஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், ரயில் பெட்டிகள் வடிவமைப்பு பொறியா ளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:
ஐசிஎஃப்-ல் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப் படுகின்றன. இதுவரையில் சுமார் 30 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் பயணிகள் ரயில் பெட்டிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற் கொண்டு அவற்றை நடைமுறைப் படுத்துவோம். தற்போது, சேலம் விரைவு ரயிலின் சரக்குபெட்டி ஒன்றில் வங்கிக்கு சொந்தமான பணம் கொள்ளை போன சம்பவத் தால், சரக்கு பெட்டிகளிலும் பாது காப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் முழுக்க ரயில்வே பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு விஷயங் களை சார்ந்ததுதான். தற்போது அறுக்கப்பட்ட சரக்கு பெட்டியின் மேற்கூரையானது 1.63 மில்லி மீட்டர் தடிமன் கொண்டது. இருப் பினும், இனி தயாரிக்கும் சரக்கு பெட்டிகளிலும் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிப்பது தொடர் பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சரக்கு பெட்டிகளில் பாதுகாப்பு அறை அமைத்து கண்காணித்தல், சிசிடிவி கேமிராக் கள் பொருத்துதல் உள்ளிட்ட வசதிகள் கொண்டுவர ரயில்வே வாரியத்திடம் பரிந்துரைக்கப்படும். ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பிறகே, இதுபோன்ற பணிகளை நாங்கள் மேற்கொள்ள முடியும் என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT